Followers

Tuesday, April 5, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          ராகுவைப்பற்றி எழுதி வரும்பொழுது காதல் திருமணத்தைப்பற்றி சொல்லிருந்தேன். அதற்கு பல நண்பர்கள் நல்ல ஆதரவையும் ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்தார்கள். எதிர்ப்பு என்ன என்றால் காதல் திருமணம் தவறா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பினர்.  

நான் ஒரு தொழில்முறையில் சோதிடம் பார்ப்பவன். என்னை தேடி வரும் நபர்களுக்கு மிகச்சரியான முறையில் வழிகாட்டுவது எனது கடமை. இதனை நான் செய்தால் மட்டுமே என்னை தேடி மக்கள் வரும் இதனை நான் செய்யவில்லை என்றால் இத்தனை வருடங்கள் இந்த தொழிலில் நிலைக்கமுடியாது.

ஒரு பெற்றோர் என்னிடம் வந்து அவர்களின் மகன் அல்லது மகளின் ஜாதகத்தை காட்டும்பொழுது அவர்களின் எதிர்காலத்தைப்பற்றி சொல்லும்பொழுது இந்த பையனுக்கு இப்படிப்பட்ட கிரகநிலை இருக்கின்றது இந்த கிரகநிலைக்கு உங்களின் பையன் காதல் திருமணம் செய்ய வாய்ப்பு இருக்கின்றது அதனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று சொல்லுவேன். 

ஜாதக பலனை சொல்லும்பொழுது மிகச்சரியான பலனை சொல்லுவதில் தான் எங்களின் வெற்றி இருக்கின்றது. நாங்கள் சொல்லும் பலன் அவர்களுக்கு நடக்கஆரம்பிக்கும்பொழுது அவர்கள் அதனை கண்காணித்து வருவார்கள். ஒன்று அதில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொண்டு அதற்கு என்ன தேவையோ அதனை செய்வார்கள் அல்லது எதனையும் செய்யாமல் ஏமாந்து போனவர்களும் இருக்கின்றார்கள்.

கொஞ்சகாலத்திலேயே நீங்கள் சொன்ன விசயம் நடந்தது சார் என்று சொன்னவர்கள் அதிகம். என்னுடைய வெற்றி என்பது மிகச்சரியான ஒரு பலனை சொன்னதில் இருக்கின்றது. பெற்றோர்களாக இருந்தால் கண்டிப்பாக இதனை பாராட்டுவார்கள். நீங்கள் சொன்னதால் எச்சரிக்கையுடன் இருக்கமுடிந்தது என்று சொல்லுவார்கள். 

ஒரு சிலருக்கு காதல் திருமணம் தான் நடக்கும் என்று இருக்கும். ஒரு சில இளைஞர்கள் வந்து நான் இந்த பெண்ணை திருமணம் செய்யபோகிறேன் இந்த ஜாதகத்தை பாருங்கள் என்று சொல்லுவார்கள். இரண்டும் சரியாக இருந்தால் அதாவது இரண்டு ஜாதகங்களும் காதல் திருமணத்திற்க்கு வாய்ப்பு இருந்தால் நீங்கள் செய்துக்கொள்ளலாம் என்று சொல்லுவேன். 

நான் பார்ப்பது ஜாதகத்தை தானே தவிர சம்பந்தப்பட்ட நபரை அல்ல. என்னுடைய வேலையை நான் சரியாக செய்தால் போதும் என்று நினைப்பேன். என்னிடம் ஆலோசனை கேட்கும்பொழுது சரியான பெற்றோர்களாக இருந்தால் அவர்கள் கண்டிப்பாக விழிப்புடன் இருந்து தன்மானத்தை காப்பாற்றிக்கொள்வார்கள். 

ஒரு பெற்றோர்களின் தன்மானம் என்பது இதுவரை பெற்று வளர்த்து நல்ல விசயங்களை எல்லாம் பார்த்து செய்தவர்கள் திருமணத்தை நடத்தவும் அவர்களால் முடியும். அவர்களின் விருப்பபடி திருமணத்தை நடத்தும்பொழுது அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷம் என்பது சொல்லவே முடியாத ஒன்று. இந்த உலகத்தில் மிகப்பெரிய விசயத்தை செய்துமுடித்தாக அவர்களுக்குள் ஏற்படும்.

பெற்றோர்கள் ஜாதகத்தை எடுத்துவரும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் அளித்து அவர்களுக்கு ஆலோசனை நான் வழங்கவேண்டும். நல்ல ஆலாேசனை வழங்குவது தான் எனது வேலை. காதலுக்கு எதிரி அல்லது எதற்க்கோ எதிரி எல்லாம் கிடையாது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: