வணக்கம்!
ஆன்மீகம் எழுதி நீண்டநாட்களாகிவிட்டது. ஆன்மீக அனுபவங்களுக்கு என்று தனியாக ஒரு கட்டண பிளாக்கை தொடங்கியதால் இதில் ஆன்மீகம் எழுதுவதில்லை.
ஆன்மீகம் என்றவுடன் இன்றைய காலத்தில் தன்னை அலங்கரித்துக்கொள்வது மட்டும் தான் ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு தன்னை அலங்கரிப்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.
ஒரு சிலர் நான் ஆன்மீகவாதி என்பதை வெளியில் சொல்லிக்கொண்டு அதன் வழியாக வரும் வரட்டு கெளரவத்தை ஏற்கிறார்கள். தன்னை ஆன்மீகவாதி என்று பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தான் அதிகம் இருக்கின்றது.
திருவள்ளுவர் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்று சொல்லியுள்ளார். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்ளலாம். நீங்கள் இறந்தவுடன் உங்களின் உடல் ஒன்று எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும். உங்களின் ஆத்மா மட்டுமே அவ்வுலகிற்க்கு செல்லபோகின்றது. ஆத்மாவில் அருள் இருந்தால் போதும்.
ஒரு உண்மையான ஆன்மீகவாதி தன்னை ஒருபோதும் அலங்கரிப்பது இல்லை. அவன் அலங்கரிப்பது அவனின் ஆத்மாவை மட்டுமே. அருள் ஆத்மாவில் இருந்தால் அவ்வுலகம் கிட்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment