Followers

Wednesday, June 1, 2016

நட்சத்திரம் தெரிந்துக்கொள்வது எப்படி?


வணக்கம்!
          ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கும்பொழுது எப்படி நட்சத்திரத்தை அறிவது என்பது தெரியவில்லை என்று சொன்னார்கள். உங்களின் ஜாதகத்தில் ராசி கட்டம் அதன் பிறகு வரும் நவாம்சம் கட்டத்திற்க்கு பிறகு உள்ள ஏட்டில் கண்டிப்பாக நட்சத்திரத்தைப்பற்றி விபரத்தை எழுதிவைத்திருப்பார்கள்.

மேலே உள்ள ஜாதகத்தை பாருங்கள். சந்திரனை எடுத்துக்கொள்வோம். சந்திரன் மகம் நட்சத்திரம் 3 பாகத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது. ராசி சிம்மம் என்றும் வந்திருக்கிறது.

சனிக்கிரகம் எதில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை அறிய தனுசு ராசி உத்திராடம் 1 என்று போட்டுள்ளார்கள். பெரும்பாலும் ராசியை சொல்லமாட்டார்கள். இந்த சாப்ட்வேரில் அதனை எழுதியுள்ளார்கள். கிரகம் நட்சத்திரம் பாகம் என்பதை மட்டும் தான் சொல்லிருப்பார்கள். இதனை வைத்து அறிந்துக்கொள்ளமுடியும்.

இப்படி ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில் எந்த பாகத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்ற தகவல் இருக்கும். இதனை வைத்து தெரிந்துக்கொள்ளமுடியும்.

புதிதாக இருப்பவர்கள் இதன் வழியாக தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் பல தகவல்கள் இதனைப்பற்றி நாம் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: