Followers

Tuesday, June 14, 2016

விமோசனம் எப்பொழுது?


வணக்கம்!
          ஒருவர் சோதிடம் பார்க்க வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் ஜாதகத்தை நாம் பார்க்க தேவையில்லை அவரை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும். இதுநாள் வரை இந்த தொழிலை செய்து வந்தாலும் அம்மனின் அருள் இருப்பதாலும் நமக்கு கிடைத்த அனுபவம் அது.

உங்களின் குடும்பத்தை நன்றாக கவனித்து பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். நன்றாக வளர்ச்சி நோக்கி வந்தால் எந்த வித சிக்கலும் இல்லாமல் செல்கிறது என்று தெரியும். ஏதோ சிக்கல் இருந்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு இடத்தில் தடை வந்துவிடும்.

இதனை எல்லாம் நாம் கவனிப்பதில்லை அந்த காரணத்தால் தான் நாம் முன்னேற்றம் என்ற ஒன்று கிடைக்காமல் தவிக்கிறோம். உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கின்றது என்றால் நீங்கள் உடனே சென்று உங்களின் தந்தை அல்லது தாயாரிடம் கேளுங்கள். ஏதாவது தவறு பிறர்க்கு செய்து இருக்கிறீர்களா என்று கேளுங்கள். கண்டிப்பாக இதனை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

மனிதனின் கெட்ட குணம் இது தான். தன்னுடைய தவறு இது தான் என்பதை ஆராய்ந்து அதனை சரி செய்ய துணிபவன் தான் வாழ்வில் மேல்நாேக்கி செல்வான். சரி செய்யாதவன் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பான். 

உங்களின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதாவது என்ன தவறு என்பதை சொல்லவில்லை என்றால் உங்களின் குடும்பத்திற்க்கு நெருக்கமானவர் அல்லது நெருக்கமான உறவினர்களிடம் விசாரித்து பார்த்தால் கண்டிப்பாக சொல்லுவார்கள்.

அதனை கண்டுபிடித்த உடனே தான் உங்களுக்கு விமோசனம் என்பது கிடைக்கும். அதனை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களுக்கு விமோசனம் என்பது கிடைக்காது.

இன்று திருச்சி செல்கிறேன். திருச்சியில் உள்ளவர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: