Followers

Saturday, June 18, 2016

தர்மமும் வளர்ச்சியும்


ணக்கம்!
          ஒரு குடும்பத்தில் தர்ம சிந்தனை என்பது மட்டும் இல்லை என்றால் அந்த குடும்பம் முன்னேற்றம் என்பது காணமுடியாது. அதாவது ஒரு குடும்பத்தில் மூன்று நபர் இருந்தால் நான்கு பேருக்கு சாப்பாடு தயார் செய்து ஒருவருக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

நிறைய பேர்கள் தனக்கு எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை என்று சொல்லுவார்கள். அவர்களிடம் நான் சொல்லுவது உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் நீங்கள் இதுவரை எந்த விதமான தர்மம் செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்ற ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்கள். செய்து இருந்தால் கண்டிப்பாக அது உங்களை காப்பாற்றும்.

ஜாதகம் எப்படி இருந்தாலும் தர்மம் உங்களை காப்பாற்றும். தர்மம் செய்துக்கொண்டு இருந்த குடும்பங்கள் இன்று நல்ல நிலைமையில் தான் இருக்கின்றது. தர்மம் செய்யாத குடும்பங்கள் இன்று பிரச்சினையை பெருமளவு சந்தித்துக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகம் எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் உங்களின் குடும்பத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். குடும்பம் செய்துள்ள தர்மம் என்ன என்பதை பார்த்தாலே புரிந்துவிடும். நாம் முன்னேற்றம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது தெரிந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: