வணக்கம்
நட்சத்திரத்தில் திருவோணம் நட்சத்திரம் ஒரு நல்ல நட்சத்திரம். திருவோணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் இருப்பார்கள். திருவோணம் மகர ராசிக்குள் வரும் உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்கள் எல்லாம் மகர ராசியாக இருப்பார்கள்.
நான் பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். திருவோண நட்சத்திரம் வரும் நாளில் நல்ல காரியம் செய்யலாம் என்று சொல்லிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் என்று ஒரு தனிசிறப்பு இருக்கும்.
பெரும்பாலும் நமது கோவில்களில் நட்சத்திரத்தை வைத்து தான் கோவில் திருவிழாக்கள் கூட நடக்கும். அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் நீங்கள் வழிபாடு செய்தால் அந்த நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் வலுமை பெறும்.
நமது ஆட்கள் உடனே சென்று இதனை செய்யவேண்டும் என்று நினைக்க வேண்டாம். நன்றாக ஜாதகத்தை பார்த்து விட்டு அதன் பிறகு உங்களுக்கு இந்த கிரகம் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அந்த கிரகம் செல்லும் நட்சத்திரத்தில் சென்று கோவிலில் வழிபாடு நடத்திக்கொள்ளலாம்.
திருவோண நட்சத்திரத்தில் பொதுவாக அனைத்து கிரகத்திற்க்கும் வழிபாடு செய்யலாம். சந்திரனின் நட்சத்திரம் என்பதால் இதனை செய்யலாம். எது செய்தாலும் சரி உங்களின் ஜாதகத்தை நன்றாக கணி்துவிட்டு அதன் பிறகு செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment