வணக்கம்!
சூரிய கிரகத்தை எல்லாம் சோதிடம் பார்ப்பவர்கள் கணக்கில் கூட எடுத்துக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். சூரிய கிரகம் எல்லாம் என்ன செய்துவிடபோகிறது என்ற நினைப்பில் தான். நாம் பிறந்துவிட்டோம் ஆத்மா வந்துவிட்டது அதனால் பெரியதாக ஒன்றும் அதனை கவனிக்கவேண்டியதில்லை என்ற நினைப்பும் இருக்கும்.
இன்று நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் அது அதிகப்பட்சம் அரசாங்கத்தை சார்ந்து தான் இருக்கிறது. அரசாங்கம் வழியாக ஒருவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு சூரிய கிரகம் நன்றாக இருக்கவேண்டும்.
கொஞ்சம் நன்றாக சிந்தித்து பாருங்கள் கண்டிப்பாக தினமும் அரசாங்கத்தை வைத்து தான் நமது வேலைகள் அனைத்தும் இருக்கும். ஒரு நாள் பேங்க் இல்லை என்றால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.
ஒரு செல்போன் அழைப்பு வருவதற்க்கு கூட அரசாங்கத்தை தான் நம்பி தான் இருக்கவேண்டும். தனியார் போனாக இருந்தாலும் கூட அதுவும் அரசாங்கத்தை நம்பி தான் இருக்கவேண்டும். நம்மோடு கலந்த ஒன்றை நாம் அதிகம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
சூரியன் என்ற கிரகம் உங்களுக்கு நன்றாக இருந்தால் ஒரளவு நன்றாக அனைத்தும் நடக்க ஆரம்பிக்கும். சூரியன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment