Followers

Thursday, June 23, 2016

ஆன்மீக நிகழ்வு


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் அதிகம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயத்தை பார்ப்பதில்லை அதற்கு காரணம் ஆன்மீகத்திற்க்கு என்று கட்டண பதிவு இருப்பதால் இதில் எழுதுவதை விட்டுவிட்டேன். அவ்வப்பொழுது ஒரு சில கருத்துக்களை சொல்லிவருகிறேன். 

ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வை நீங்கள் நடத்தமுடியுமா என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு நிகழ்வை நாம் நடத்தி வைத்துவிட்டால் அதுவே நமக்கு பெரிய பாக்கியம்.

உங்களின் ஊரில் ஏதாே ஒரு கோவில் நிகழ்ச்சியை நீங்கள் நடத்தமுடியுமா என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு அதில் சென்று ஈடுபடுங்கள். அந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தும்பொழுது தான் அதில் உள்ள நல்லது கெட்டது தெரியும் எது வந்தாலும் அதனை நாம் நடத்திவிட்டால் அது தான் பெரிய பாக்கியமாக நமக்கு இருக்கும்.

கோவில் என்று வரும்பொழுது அதில் நிறைய சிக்கல் மற்றும் தடைகள் வரும் அதனை மீறி நாம் நடத்தவேண்டும். நல்லது நடக்க பல தடைகளை நமக்கு கொடுப்பது இயற்கையான ஒன்று. அதனை நாம் நடத்திவிட்டால் அதுவே பாக்கியமாக நமக்கு கிடைத்துவிடும். 

கோவில் நிகழ்ச்சி என்று வரும்பொழுது பல சூட்சமமான விசங்கள் நமக்கு கிடைக்கிறது என்பது அனுபவ உண்மை. ஒவ்வொறு ஆன்மீகநிகழ்வுகளிலும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.இதனை படிக்கும் நீங்களும் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வில் பங்குபெற்று நடத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

திருவாரூர் சரவணா said...

உண்மைதான் ஐயா...

வரலாறு தெரியாத அளவுக்கு பழமையான ஒரு பிள்ளையார் கோவிலை இடித்து புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த முயற்சி எடுத்தோம். கண்ணுக்குத் தெரியாத அளவில் பொருளாதாரம் உள்ளிட்ட உதவியை எவ்வளவோ பேர் செய்தார்கள். ஆனால் எல்லாபணிகளையும் முன் நின்று செய்தது கோவில் அர்ச்சகர், நான், இன்னொரு நண்பர்தான். கோவிலின் மடப்பள்ளியை ஆக்கிரமித்து ஒருவர் மளிகை கடை வைத்திருந்தார். அவருக்கு அதிகாரத்தில் இருக்கும் பல துறையினரும் ஆதரவு. விளைவு கும்பாபிஷேக முயற்சியில் ஈடுபட்ட எங்களுக்கு பல வகையிலும் மிரட்டல். மிகுந்த போராட்டத்திற்கு பின் 6 லட்ச்சத்தில் போட்ட திட்டம் 11 லட்ச ரூபாய் என்ற அளவில் போய் நின்றது. 2009ல் ஆரம்பித்த திருப்பணியை 4 ஆண்டுகள் கழித்து 2013ல் முடிக்க வைத்து கும்பாபிஷேகம் செய்து கொண்டார் மிஸ்டர் பிள்ளையார். இப்படி ஒரு பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு இப்போதும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.