வணக்கம்!
நட்சத்திரம் என்ற ஒன்றை சொன்னவுடன் நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதனைப்பற்றி கேட்கின்றனர். உண்மையில் நல்ல பலன் கிடைக்கிறது அதாவது நீங்கள் சொன்னதை வைத்து எங்களின் ஜாதகத்தை சோதனை செய்யும்பொழுது அது நல்ல பலனாக இருக்கிறது. இதுநாள் வரை தெரியாத பல விசங்கள் தெரிகிறது என்றார்கள்.
நான் சொல்லுவதை அப்படியே நீங்கள் நம்பவேண்டாம் உங்களின் வாழ்க்கையில் நடக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு சொல்லுங்கள் என்று நான் பலமுறை சொல்லிருக்கிறேன். உண்மையை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் உங்களின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்.
ஜாதகம் என்பது நமக்கு ஒரு நல்லவழிகாட்டி இதனை மிகச்சரியாக பார்த்து அதனை நாம் பயன்படுத்தும்பொழுது அது நமக்கு பொக்கிஷமாக அமைந்துவிடுகிறது. இன்றைக்கு பல பேரின் பிரச்சினையை தீர்க்க இந்த நட்சத்திர வழியைதான் நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
நட்சத்திரம் மட்டும் அல்லாமல் அதற்குள் சென்று எந்த பாதம் என்பதை அறிந்துக்கொண்டு அதனையும் நன்றாக கவனித்தால் இன்னமும் பல நல்ல விசயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
பல ஜாதகங்களை எடுத்து நீங்களே சோதனை செய்து பாருங்கள். அனைத்தும் மிகசரியான பலன்களை நீங்களை தெரிந்துக்கொள்ளலாம். அதனோடு பரிகாரத்தையும் செய்து பாருங்கள் நன்றாக வேலை செய்யும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment