Followers

Friday, March 10, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          ஒரு காலக்கட்டத்தில் என்னுடைய வாழ்வில் பின்னிபிணைந்தவர் கோரக்கர் என்றால் அது உண்மை என்றே சொல்லவேண்டும். அந்த காலத்தில் அவரின் அருள் நம்மீது பட்டு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அவரைப்பற்றி பேசும் வாய்ப்பு அந்த நேரத்தில் கிடைத்தது.

என்னங்க பேசுவதற்க்கு வாய்ப்பு கிடைக்கவேண்டுமா என்று கேட்கலாம். நாம் தினசரி வாழ்வில் கடவுளைப்பற்றி ஏதாவது ஒரு வார்த்தை பேசுகிறோமா என்று பாருங்கள். வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் பேசலாம். தினமும் பேசினால் அது புண்ணியம். வாழ்க்கைக்கு சம்பந்தமே படாத எத்தனையோ விசயங்களை பேசிக்கொண்டு இருக்கிறோம்.

பிற மதங்களை பாருங்கள் ஐந்து வேளை தொழுவுகிறார்கள் நம்ம அப்படி இல்லை. அடுத்தவரை நாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நாம் குறைவாக தான் கடவுளை கும்பிடுகிறோம் என்று தோன்றுகிறது. 

நாம் ஆன்மீகத்தைபற்றி பேசகூடிய ஒரு நிலையில் இல்லாத நேரத்தில் கோரக்கரைப்பற்றி பேசுவது என்றால் கண்டிப்பாக அந்த நேரத்தில் அவரின் அருள் இல்லாமல் நடக்குமா என்பது எனக்கு சந்தேகம். 

நானும் ஒரு வயதான ஒருவரும் பேசும்பொழுது நாகப்பட்டிணத்தில் அவருக்கு ஜூவசமாதி இருக்கின்றது. கோரக்காபூரில் ஜூவசமாதி இருக்கின்றது என்று சொன்னேன்.அவர் என்னிடம் சொன்னார். எப்படி ராஜேஷ் இரண்டு இடத்தில் ஜீவசமாதி இருக்கும் இது நம்பும்படியாக இல்லையே என்றார். 

அவர் கேட்ட இந்த கேள்வி தான் நான் நாகப்பட்டிணம் செல்லாமல் இருந்தேன். ஒரு சிலர் கோரக்கர் பிறந்தது கோரக்பூர் என்றும் அவர் ஜூவசமாதி அடைந்தது நாகப்பட்டிணத்தில் என்றும் சொல்லுகின்றனர். சித்தரைப்பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை அவர் காட்டும் பாதையை மட்டும் சென்றால் போதும் என்றும் இருந்துவிட்டேன்.

சித்தர்களால் அனைத்தும் சாத்தியமே என்பது தற்காலத்தில் எனக்கு தெரிந்த உண்மை. அதுபோல ஜீவசமாதியும் இருக்கலாம் என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell No : 9551155800

1 comment:

Unknown said...

There is one in girnar in gujarat too!! I have been there long back!