வணக்கம்!
ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் காலையில் நண்பரை சந்தித்துவிட்டு மாலை நேரத்தில் நண்பர் சந்திரசேகர் அவர்கள் தொடர்புக்கொண்டு ஒரு கோவிலுக்கு செல்லவேண்டும் வாருங்கள் என்று கூப்பிட்டார். அவிநாசி அருகில் உள்ள தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில் தான் அது. சேவூர் வழி அவிநாசி தாலுக்கா கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த கோவில் அமைந்து இருக்கின்றது.
இங்கு விநாயகர் சர்ப்பவிநாயகராக இருக்கின்றார். ராகு கேது தோஷத்திற்க்கு பரிகாரமாக இந்த சர்ப்பவிநாயகரை வழிபடலாம் என்று நண்பர் சொன்னார்.
கோவிலில் மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு சக்கரத்தோடு சாந்தமூர்த்தியாக இருக்கின்றார். நரசிம்மர் மஹாலட்சுமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். சந்தனகாப்பு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மடியில் மஹாலட்சுமி அமர்ந்து இருப்பார். இந்த கோவிலில் நின்ற கோலத்தில் மஹாலட்சுமி அருள்பாலிக்கிறார். கருடாழ்வாரும் இருக்கின்றார்.
500 வருடம் பழமையான கோவிலாக இந்த கோவில் இருக்கின்றது. நீங்கள் அவிநாசி பக்கம் சென்றால் இந்த கோவிலையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். எனது பயணத்தில் இந்த கோவில் தரிசனம் கிடையாது ஆனால் கடவுளின் அருளால் இது நடந்தது. இந்த கோவிலைப்பற்றி அன்று தான் எனக்கே தெரிந்ததது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment