வணக்கம்!
சந்திரன் சனியோடு சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மணவாழ்வும் நன்றாக இருக்காது. மனநிலையும் நன்றாக இருக்காது என்பதை ஏற்கனவே நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சனியோடு சந்திரன் சேரும்பொழுது அவர்கள் தொடர்பு வைத்திருப்பவர்கள் தங்களின் நிலையை விட தாழ்ந்தவர்களிடம் தொடர்பு வைத்திருப்பார்கள்.
ஒரு படித்தவர் படிக்காதவர்களிடம் தொடர்பு வைத்திருப்பது என்பது அந்தளவுக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லலாம் ஆனால் சனி சந்திரன் கூட்டணியில் இருப்பவர்கள் இணைபிரியாத நட்போடு பழகுவார்கள்.
சனி சந்திரன் தொடர்பு இருந்தால் தாழ்ந்தப்பட்ட பெண்ணை மணக்கும் நிலையும் உருவாகும். தன்னைவிட கீழ் உள்ள சாதியினரை மணக்கலாம். திருமணம் ஆகவில்லை என்றாலும் கூட தன்னை விட கீழ் சாதியில் உள்ள பெண்ணிடம் ஒரு தொடர்பை வைத்திருப்பார்கள்.
சனி சந்திரன் தொடர்பு இருக்கும்பொழுது தன்னை விட வயதில் மூத்தவர்களோடு பேசிக்கொண்டு இருப்பது மிகவும் பிடிக்கும். இருபது வயதில் இருந்துக்கொண்டு அறுபது வயதில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.
சனி சந்திரன் இணைவு என்பது தன்னை விட வயதில் மூத்தவர்களிடம் மட்டும் இல்லாமல் ஆன்மீகத்திலும் அதிகமான நாட்டத்தை உருவாக்கிவிடும். சனி சந்திரன் கூட்டணி ஆன்மீகம் சிறந்த நிலையில் இருப்பார்கள்.
மேலே சொன்னதற்க்கும் பரிகாரம் தேவைப்படும். இப்படி உங்களின் ஜாதகத்தில் இருந்தால் உடனே ஜாதகத்தை அனுப்பி வைக்கவேண்டுகிறேன்.
நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா காலை வணக்கம் 19 /03 /2017
துலா லக்கினம் . சந்திரன் + கேது கும்பத்தில் . குரு நீசம் பெற்றதால் குழந்தைகள் அனுகூலமாக இல்லை .
மனோகாரகன் சந்திரனுடன் ( தேய்பிறை ) கேது . குழந்தைகளால் மகிழ்ச்சி குறைவு .
ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது .நல்ல சிந்தனை உள்ளது .
வேறு என்ன ? என்பதை தங்கள் பதிவில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .
என்றும் அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
Post a Comment