Followers

Friday, March 17, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          கர்மா பதிவை படித்துவிட்ட பலர் நிறைய சந்தேகங்களை கேட்டுள்ளனர். கர்மா என்பதைப்பற்றி நிறைய பதிவுகள் நம் ஜாதககதம்பத்தில் இருக்கின்றன அப்படியே இருந்தாலும் ஒரு சின்ன கருத்தை தான் அதில் சொல்லிருந்தேன்.

நான் இலவசமாக பரிகாரம் செய்தால் கூட சம்பந்தப்பட்ட நபரிடம் நீங்கள் ஏதாவது ஒன்றை ஆன்மீகபணிக்காக செய்துவிடுங்கள் என்று சொல்லுவேன். அது உங்களை காப்பாற்றும்.

இந்த உலகத்தில் தீயவனாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது ஆனால் ஒருவன் நல்லவனாக இருந்தால் தான் பிரச்சினை. நல்லவனாக இருந்தால் அவன் வாழமுடியாது. அது கடவுளுக்கு கூட பிடிக்காது என்று தான் நான் எண்ணுகிறேன்.

இந்த காலத்தில் இளைஞர்கள் ஆன்மீகத்தை நாடி செல்லுகின்றனர். ஆன்மீகத்தை நாடி செல்லும் நபர்களுக்கு கர்மா விசயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். 

இளம்வயதில் நிறைய ஆசை அல்லது ஒரு ஈர்ப்பு இருக்கும். அது என்ன என்றால் நிறைய ஆன்மீகத்தை கற்று அதனை பிறர்க்கு இலவசமாக செய்யவேண்டும் என்ற ஒரு ஆசை தான் அது. நடைமுறையில் நிறைய சிக்கல்கள் இதில் இருக்கின்றது என்பதற்க்காக தான் இது எல்லாம் செய்யவேண்டாம் என்று சொல்லுகிறேன். அடுத்தவர்களின் கர்மாவை சுமப்பதற்க்கும் விதி இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படகூடிய ஒன்று. 

எங்களை காப்பாற்ற நல்லகுரு இருக்கிறார். அம்மன் இருக்கின்றது அதனையும் மீறி நடந்தால் மட்டுமே அது கடைசி விதி என்று இருக்கும். அவ்வளவு எளிதில் கர்மா தாக்கமுடியாது. எங்களைபோல ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு செயல்புரிய ஆரம்பியுங்கள்.

உங்களின் குடும்பத்தை மட்டும் மேலே ஏற்ற வழி என்ன என்பதை பார்க்கவேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது அது நம்மால் முடியும் என்றால் செய்யலாம். அப்படி இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு நிறைய நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். நான் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன். உடனே தாமதப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: