வணக்கம்!
ஒருத்தன் வறுமையில் விழுந்துவிட்டால் அவன் மறுமுறை மீண்டு வருவது என்பது அந்தளவுக்கு சுழலமான ஒரு வழி கிடையாது. ஆயிரம் அடி எடுத்து வைத்தாலும் அத்தனை அடியும் சறுக்கி கீழே விழும். அவர்களின் பாடு என்பது சொல்லமுடியாத ஒன்று.
நானும் கடுமையான வறுமையை சந்தித்தவன் தான். அதன்பிறகு கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன். நம்முடைய கடந்த காலத்தை நினைத்து பார்க்கையில் தற்பொழுது இருக்கும் நிலைமை பரவாயில்லை. கடந்தவந்த பாதையை நாம் மறக்ககூடாது என்பதால் அதனை தழுவி இந்த பதிவை தந்திருக்கிறேன்.
ஒவ்வொன்றாக நாம் அலசி அலசி ஆராய்ந்து எந்த இடத்தில் நாம் தவறி நின்றோம் என்று பார்த்து அதனை எல்லாம் சரிசெய்து மேலே வந்து இருக்கிறோம்.
கிரகங்களில் எது நம்மை அடிக்கிறது. கிரகங்கள் தான் நம்மை அடிக்கிறதா அல்லது வேறு ஏதாவது தொந்தரவு இருக்கின்றதா நாம் செய்யும் தவறு என்ன, செய்த தவறு என்ன என்பதை எல்லாம் பார்த்து மேலே வருவதற்க்கு பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது.
இன்றைக்கு அது தான் எனக்கு அனுபவமாக பாடமாக வழிகாட்டியாக இருக்கின்றது. நம்மை தேடி வருபவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நினைப்பும். பலருக்கு செய்துக்கொண்டு இருக்கும் இன்றைய நிலையும் இதனை தழுவி தான் இருக்கின்றது.
இன்றைக்கு ஒருவர் வந்தால் அவர் செய்த தவறு என்ன என்பதை விட வந்திருப்பவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை தான் நான் நினைத்து செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
நிறைய தவறு செய்திருக்கிறேன் என்று நீங்கள் கவலைபடவேண்டாம் எப்படி என்னால் முன்னேற்றம் அடையமுடியும் என்ற ஒரு பிடிப்போடு வாருங்கள். அதற்கு என்ன செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்து வாழ்வில் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக நமது ஜாதககதம்பம் நடத்தும் அம்மன் பூஜை மற்றும் பரிகாரபூஜையில் கலந்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cellno : 9551155800
No comments:
Post a Comment