Followers

Friday, March 27, 2020

பாவத்தை போக்கும் மரம்


வணக்கம்!
கோவிலில் தல விருட்ஷம் என்பது மிக முக்கியமான ஒன்று. உருவவழிபாடு உருவாகாத காலத்தில் நம் முன்னோர்கள் மரத்தை வைத்து தான் வழிபாட்டை செய்தார்கள். மரம் என்பது கடவுள் என்று அதனை வணங்கி வாழ்ந்தனர். இன்றைய காலத்திலும் கோவில்களில் தலவிருட்ஷம் என்பது ஒன்று இருக்கின்றது. இதனையும் நாம் இன்று காலத்திலும் வணங்கி வருகிறோம்.

நமது அம்மன் அங்காளபரமேஸ்வரியை நாம் வணங்குவது கூட மரத்தில் வைத்து தான் வணங்கிறோம். இன்றைய காலத்திலும் இந்த நடைமுறை பல இடங்களில் இருப்பதை நாம் பார்க்கமுடியும். கிராமபுறங்களில் இது அதிகமாகவே இருக்கின்றது. நகர்புறங்களில் தற்சமயம் இராகு கேதுவிற்க்கு மரத்தை வைத்து அதில் ஒரு நாகசிலையை வைத்து வணங்கி வருகின்றனர்.

வீட்டில் துளசி செடியை வைத்து வணங்கும் நடைமுறை கூட நமது பாவத்தை அந்த செடி வாங்கிக்கொள்ளும் என்ற காரணத்தால் தான் வீட்டில் வைத்து வணங்குகின்றனர். மாரியம்மனை எல்லாம் வேப்பம்மரத்தில் வைத்து வணங்குவது கூட அந்த மரத்திற்க்கு அந்தளவுக்கு சக்தியை கொடுக்கும் ஆற்றல் இருப்பதால் அதனை வைத்து வணங்குகின்றனர்.

சீன மற்றும் திபெத்தில் தாவோ என்ற மதத்தில் உள்ள ஞானிகள் தங்களின் ஞான கருத்தை ஒரு சீடர் கிடைக்கவில்லை என்றால் மரத்தில் சொல்லிவிட்டு செல்வார்கள் அதன்பிறகு ஞானத்தை தேடி வரும் நபர் அந்த மரத்திற்க்கு அருகில் செல்லும் பொழுது அவர்க்கு அந்த கருத்தை மரம் கடத்திக்கொடுக்கும். மரத்தை நாம் வணங்கும்பொழுது நமக்கும் ஞான கருத்தை கொடுத்து நமது பாவத்தையும் போக்குகின்றது.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவிட்டுருக்கிறேன் அதனை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: