Followers

Thursday, August 8, 2019

எதார்த்தம்


வணக்கம்!
          இலவச சோதிட ஆலோசனைக்கு நிறைய ஜாதகங்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம் ஒதுக்கி அவர்களோடு பேசுவதால் கொஞ்சம் காலம் எடுக்கின்றது. அனைத்து ஜாதகங்களையும் நான் பார்த்துவிடுவேன். அவசரப்பட்டுக்கொண்டு போன் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பொறுமையாக இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதகத்தில் உள்ள பிரச்சினை என்பதை தாண்டி ஒருவர் எப்படி நடந்துக்கொள்கின்றார் என்பதை பொறுத்தும் அவர்களுக்கு நன்மை நடக்குமா அல்லது தீமை நடக்குமா என்று தெரிந்துக்கொள்ளலாம். முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளவேண்டும். என்ன என்றால் இந்த காலத்தில் நல்லவர்களை விட கெட்டவர்கள் நல்ல வாழ்கின்றார்கள்.

என்ன நீங்களே இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். நன்றாக பார்க்கபோனால் நல்லவர்களை விட கெட்டவர்கள் நல்ல வாழ்வார்கள். நான் நல்லவனாக இருப்பதற்க்கு பதில் கெட்டவனாகவே மாறிக்கொள்கிறேன் என்று மாறிவிடாதீர்கள். 

ஒருத்தர் தன்னுடைய வாழ்நாளில் நல்லவர்களாக இருந்தால் சிரமம் அதிமாக தான் இருக்கும் ஆனால் அவர்களின் வாரிசுகள் நன்றாக வாழ்வார்கள். கெட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனோடு அவன் அழிவது போலவே இருக்கும். நல்லவர்களுக்கு தினமும் பிரச்சினை வந்தாலும் அவன் வாழ்வதற்க்கு அவனை தயார் செய்கின்றது என்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆன்மீகத்தில் இருந்தால் இன்னமும் அதிக பிரச்சினை வரும் அதனை தாண்டியும் அவன் கஷ்டப்பட்டு இருந்துவிட்டால் அவனின் அத்தனை வாரிசுகளும் காலம் காலமாக புண்ணியம் சேர்த்துக்கொண்டே போவான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெற இருப்பதால் காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். ஆடி மாத அம்மன் பூஜையாக இருப்பதால் அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 5, 2019

இலவச சோதிட ஆலோசனை

வணக்கம்!
          அனைவரும் தங்களின் ஜாதகம் மற்றும் தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பி இலவச ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம். பலர சோதிடத்தை படிப்பார்கள் ஆனால் தங்களின் ஜாதகத்தின் பலனை பார்க்க மறந்துவிடுவார்கள். அனைவரும் தங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவசமாக கேட்டுக்கொள்ளலாம். முடிந்தவரை தொலைபேசியில் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் டைப் செய்து அனுப்புவது கடினமாக இருக்கும். இலவசத்தில் கேட்பது தவறு என்று நினைக்காமல் அனைவரும் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வடக்கு பார்த்த வீடுகள்


வணக்கம்!
          அனுபவத்தில் நாம் பார்க்கும்பொழுது வடக்கு வாசல் பார்த்த வீடுகள் வாழ்வது போல பிற வாசல் பார்த்த வீடுகள் வாழ்வதில்லை. வாஸ்து படி சொன்னார்கள் என்றால் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வாசல் என்பது முதல் தரம் என்பார்கள். இதில் வடக்கு பார்த்த வாசல்கள் தான் முதல் தரமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் வாஸ்து பார்த்து கணித்த கணிப்பு இது கிடையாது அனுபவத்தில் நிறைய பேரை பார்த்து அதன் வழியாக உங்களுக்கு சொல்லுகிறேன். வடக்கு பார்த்த வீடுகளுக்கு செல்வ செழிப்பு மற்றும் அவர்களின் வாழ்நாட்களில் அவர்கள் இருக்கும் புகழுக்கு நிகரில்லை என்று சொல்லலாம்.

பழைய காலத்தில் தெற்கு பார்த்த வீடுகளுக்கு தான் மவுசு அதிகமாக இருந்தது. தெற்கு பார்த்த வீடுகள் கட்டினால் அதற்கு தென்றல் காற்று வீசும் அதன் வாங்கிக்கொண்டு இருக்கலாம் என்று இருந்தார்கள். தற்பொழுது இது எல்லாம் அந்தளவுக்கு மக்கள் விரும்பவில்லை.

தெற்கு பார்த்த வீடுகளில் உள்ளவர்கள் வாழவில்லையா என்று கேட்கலாம். தெற்கு பார்த்த வீடுகளில் உள்ளவர்கள் வாழ்வார்கள் ஆனால் அவர்களுக்கு நல்ல காலம் இருக்கும் வரை தான் வாழ்வார்கள். கெட்டகாலம் வந்துவிட்டால் அவர்களின் வாழ்வு தரம் குறைந்துவிடும்.

வடக்கு பார்த்த வீடுகளுக்கு கெட்டகாலம் வந்தால் கூட அவர்களுக்கு ஏதோ ஒன்று அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொண்டே சென்றுக்கொண்டு இருக்கும். எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் உடனே அதில் இருந்து மீண்டு சென்றுவிடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 3, 2019

பாவமும் புண்ணியமும்


வணக்கம்!
          நேற்று தந்த ஆத்மசாந்தி பூஜை பதிவை படித்துவிட்டு பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். என்னால் இவரை கவனிக்கமுடியவில்லை அதனால் எனக்கு பாவம் வந்து சேருமா என்று கேட்டனர். 

இன்றைய வாழ்க்கை ஒரு பரபரப்பான ஒரு வாழ்க்கையாகவே இருக்கின்றது. பலர் தங்களின் கடமையை நிறைவேற்ற தவறிவிடுகின்றனர். என்ன தான் பரபரப்பான ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் நமது கடமை என்பதை நன்கு சிந்தித்து அதற்கு தகுந்தார் போல் செயல்படவேண்டும்.

பாவமும் புண்ணியமும் கலந்து தான் மனிதன் பிறப்பான். நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்படுவதால் அனைத்து கடமையையும் இழுத்துபோட்டு செய்யவேண்டும். உங்களின் தாய் தந்தையை விட்டுவிடகூடாது. உங்களின் வீட்டில் பெரியோர்கள் யார் இருந்தாலும் விட்டுவிடகூடாது. அவர்களை பரபரப்பான சூழ்நிலையில் நீங்கள் கவனித்தால் கண்டிப்பாக அது தான் சிறந்த ஒன்றாக இருக்கும்.

பாவமும் புண்ணியமும் என்பது இதுவரை நீங்கள் முற்பிறவியில் பெரியோர்களை கவனிக்க தவறிய விட்ட கடமையால் பாவம் இருக்கும். அந்த பாவத்தை எல்லாம் இந்த பிறவியில் இருக்கும் பெரியோர்களுக்கு நீங்கள் செய்யும்பொழுது அது புண்ணியமாக இருக்கும்.

உங்களுக்கு இதுவரை நடந்தவிசயங்களை எல்லாம் விட்டுவிட்டு உங்களின் நீங்கள் அனைத்து கடமையும் செய்பவர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு செயல்படுங்கள். அனைத்திலும் உங்களுக்கு மதிப்பும் கூடும் உங்களின் வாழ்க்கையும் சிறக்கும்.

பலர் இந்த அமாவாசையை தவறவிட்டுவிட்டார்கள். அடுத்த அமாவாசையில் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளலாம். புரட்டாசி மாத அமாவாசையில் இதனை செய்வோம் அப்பொழுது இலவசமாக செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 2, 2019

வீடு


வணக்கம்!
         பல வருடங்களாக தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு நாம் பரிந்துரை செய்யும் கருத்தாக இருப்பது நீங்கள் ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்லுவது உண்டு. பலருக்கு என்னுடைய வேண்டுதல் அவர்களுக்கு எப்படியும் ஒரு வீடு கிடைத்துவிடவேண்டும் என்று இருக்கும்.

மறைமுகமாகவே இந்த வேண்டுதலை வரும் நண்பர்களுக்கு வைத்துவிடுவேன். தொடர்ச்சியாக நம்மை நோக்கி வரும் நண்பர்களுக்கு நம்மால் முடிந்த நிறைய ஆன்மீகவிசயங்களை அவர்களுக்கு என்று செய்துக்கொடுப்பது உண்டு.

எந்த வித பணத்தின் நோக்கம் இல்லாமல் அவர்களுக்கு நல்ல வீட்டை நாம் நமது வழியில் அமைத்துக்கொடுக்கவேண்டும் என்று இதனை செய்து இருக்கிறேன். அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் அவர்களின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பேற்று இதனை செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

வரும்காலத்தில் இதனை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் இன்றைய காலத்தில் வீடு வாங்குவது என்பது ஒரு லாபம் அற்ற முதலீடு என்று நினைக்கிறேன். பெரியதாக லாபம் என்பது இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு கோடி இரண்டு கோடி என்று பணத்தை போட்டு அதில் இருந்து பெரியதாக ஒன்றும் கிடைக்க போவதில்லை என்பது போலவே இருப்பதால் இதனை தவிர்க்க நினைத்து இருக்கிறேன்.

உங்களுக்கு எது நல்ல முதலீடாக இருக்கும் என்பதை உங்களின் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசித்துவிட்டு அதில் உங்களின் முதலீடுகளை போடுங்கள். பெரியளவில் பணத்தை போட்டு வீட்டை வாங்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆத்மசாந்தி பூஜை


வணக்கம்!
          ஆத்மசாந்தி பூஜை செய்தபொழுது நிகழ்ந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். இதனை நம்புவது கஷ்டமாக இருந்தாலும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது அதனால் இதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.

பல ஆத்மாக்கள் மறுபிறவி எடுத்து இருக்கின்றது என்பதை சொல்லவேண்டும். நாம் இதற்க்கு செய்யும்பொழுது அவர்களின் தற்பொழுது உள்ள வாழ்வு சிறக்கவும் செய்யும். கண்டிப்பாக அந்த ஆத்மாக்கள் உங்களை வாழ்த்தும்.

ஒரு சில ஆத்மாக்கள் இறக்கும்பொழுது பட்டினியில் கிடந்து இறந்து இருக்கின்றது. இன்றைக்கும் பல வீடுகளில் நடக்கும் சம்பவமாக இது இருந்தாலும் நமது நண்பர்கள் கொடுத்த விசயத்தை வைத்து செய்யும்பொழுது சோறு போடாமலேயே இருந்து இருக்கின்றனர்.

ஏதோ ஒரு விதத்தில் இந்த குற்றம் உங்களையும் பின்தொடர்கின்றது. யார் என்பதை நான் வெளியில் சொல்லவில்லை நீங்கள் கொடுத்த நபர்களின் உண்மை தன்மை அதாவது அவர்களின் வாழ்க்கை கடைசி காலத்தில் எப்படி சென்றது என்பதை நீங்கள் நினைத்து பாருங்கள் நான் சொல்லுவது உங்களுக்கு புரியும்.

என்னால் முடிந்தளவுக்கு இதற்கு எல்லாம் செய்து இருக்கிறேன். நாம் தற்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்பது தெரிகின்றது. முடிந்தவரை நண்பர்களே உங்களின் வீட்டில் இருக்கும் வயதானவர்களை நன்றாக கவனிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறுவதால் காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். ஆடி மாதம் என்பதால் அனைவரும் இதில் பங்குக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          தெளிவான சிந்தனையோடு செயல்படவைப்பது ஆன்மீகத்தின் முக்கியபங்கு. மற்றவர்களை விட ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெரிய சிக்கல்களை மாட்டிவிடமால் அவர்களை தெளிவாக வைக்கும்.

நீங்கள் சரியானவர்களாக இல்லாமல் ஏதோ போகின்ற போக்கில் போகட்டும் என்று இருந்தால் நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதற்க்கே லாயக்கற்றவர்கள் என்று அர்த்தம்.  ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை விட அதிகமான சிந்தனையில் இருப்பவர்கள் என்பதால் தெளிவாக இருங்கள் என்று சொல்லுகிறேன்.

பலர் பெரிய சிக்கல்களில் சிக்கி தவிப்பதற்க்கு காரணமாக இருப்பது எல்லாம் அவர் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்காமல் இருப்பதால் தான் ஏற்படுகின்றது. தெளிவான முடிவுகளை எடுக்க குரு கிரகம் நன்றாக செயல்படவேண்டும்.

ஒரு ஆன்மீகவாதி என்றாலே அவர்க்கு கண்டிப்பாக குரு கிரகம் நன்றாக செயல்படும். குரு கிரகம் நன்றாக செயல்படும்பொழுது அவரால் சிறப்பான ஒரு முடிவை எடுப்பார்கள். சிக்கலில் இருந்து வெளியில் வருவதற்க்கு குரு கிரகம் வேலை செய்யவேண்டும்.

உங்களின் கடந்தகால தவறுகளை எடுத்து பார்த்தால் குரு கிரகம் சரியில்லாத நேரத்தில் எடுத்த முடிவுகளால் தான் பெரும்பாலும் இருக்கும். மற்ற கிரகங்களின் பலன் அதிகமாக இருக்கும்பொழுது முடிவுகள் சரியாக இருக்காது. முடிந்தவரை நாம் நன்றாக சிந்தித்து செயல்படுகிறோமா என்பதை பார்த்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு