Followers

Monday, February 23, 2015

ஆன்மீக அனுபவங்கள் 176


வணக்கம்!
         நண்பர் பரமேஸ்வர் என்னிடம் பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்கிறார்களே அது செய்யவிட்டாலும் அதன் சக்தி அங்கேயே இருக்குமா அல்லது சக்தி குறையுமா என்று கேட்டுருந்தார். அவருக்கான பதிலை அவரிடம் சொல்லிவிட்டேன். அதனை நீங்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பதிவில் சொல்லுகிறேன்.

கும்பாபிஷேகம் பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்யவேண்டும். கோவிலில் இருக்கும் வீணாக போன பொருட்களை மாற்றவேண்டும். அதே நேரத்தில் சிலைக்கு கீழே இருக்கும் மருந்து என்று சொல்லப்படும் அஷ்டமருந்து புதுப்பிக்கவேண்டும்.

அஷ்டபந்தனமருந்து சிலையை சுற்றி வைப்பார்கள். அபிஷேகம் செய்யும்பொழுது அந்த மருந்தில் பட்டு அபிஷேகப்பொருட்கள் வரும். அந்த அபிஷேகப்பொருட்களை நாம் உண்ணும்பொழுது அல்லது பருகும்பொழுது நம்மை அந்த அபிஷேகப்பொருட்கள் நோயில் இருந்து பாதுகாக்கும். 

பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கவில்லை என்றாலும் சக்தி அங்கேயே தான் இருக்கும். நோய் தீர்க்கும் அஷ்டபந்தனமருந்தின் தன்மை மட்டும் குறையும். அதனை புதுப்பிக்கவேண்டும் என்பதற்க்காகவும் ஒரு சில விசயங்களை புதுப்பிக்கவேண்டும் என்பதற்க்காகவும் பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: