Followers

Monday, February 16, 2015

சிவனின் நாள்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று கோயம்புத்தூர் பயணத்தில் மருதமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நல்ல தரிசனம். ராஜஅலங்காரத்தில் தரிசனம் கிடைத்தது. இன்று காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன்.

நேற்று திடிர் பயணமாக மருதமலை முருகனை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று கிரிக்கெட் போட்டி என்று கேள்விப்பட்டேன். நான் கிரிக்கெட் பார்த்தது கிடையாது. இந்தியா பாகிஸ்தான் இரண்டுக்கும் போட்டி என்று நண்பர் சொன்னார், அடடா எனக்கு தெரியவில்லையே என்று சொன்னேன். தெரிந்து இருந்தால் உங்களுக்கு இந்த செய்தியை முதலிலேயே சொல்லிருப்பேன்.

கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் உள்ள முக்கால்வாசி மக்கள் பார்த்து இருப்பார்கள். ஒட்டுமொத்த மக்களின் எண்ணமும் கிரிக்கெட் மீது இருக்கும்பொழுது நாம் கடவுள் மீது பக்தியை வைத்தால் அந்த நேரத்தில் நாம் கடவுளிடம் இருந்து நிறைய பெற்றுவிடலாம்.

அடுத்தமுறை இப்படிப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் கடவுளிடம் பக்தியை செலுத்துங்கள். மிக எளிதில் அவரை நீங்கள் அடைந்துவிடமுடியும். நம்மை யாரும் இன்று தீண்டவில்லை என்று இருக்கும் நேரத்தில் நாம் அவரை மனதில் நினைத்தால் பரவாயில்லை இந்த நேரத்திலும் என்னை நினைக்க ஆள் இருக்கின்றது என்று அவர் நமக்கு அருள் செய்வார்.

இன்றும் நாளையும் சிவனை நினைக்க மிக சிறந்த நாள். பிரதோஷ காலத்தில் நான் சிவன் கோவிலுக்கு செல்லுகிறேன். பூஜைக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்துவிட்டு பூஜையில் கலந்துக்கொள்கிறேன். நாளை அம்மனுக்கு விஷேசமான நாள். நாளை அம்மனையும் இரவில் அப்பனையும் நினைத்துக்கொண்டே இருங்கள்.

இந்த வருடத்தில் நாளை நாள் மிகசிறந்த நாள். சிவனுக்கு ஒரு நாள் தான் அது சிவராத்திரி நாள். நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

மிக நல்ல தகவலுடன் மிக அருமையான பதிவு ........

பிரசன்ன குமார். மு said...

நல்ல தகவல் அண்ணா நன்றி