Followers

Sunday, February 1, 2015

கோவில் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                                 நேற்று திருநள்ளார் சனி பகவான் ,அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன், பூம்புகார் பீச்,திருவெண்காடு புதன் ஸ்தலம், கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலம், திருநாகேஷ்வரம் இராகு ஸ்தலம் ஆகியவற்றை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த தலங்கள் அனைத்தும் சென்று வருவதற்க்கு எனது குடும்பத்தார்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

பொதுவாக நான் கோவில்களுக்கு சென்றால் எனது வழிபாட்டு முறைகள் அனைத்தும் வித்தியாசப்படும். நான் எனது குருவோடு சென்று வந்தால் கோவிலுக்கு உள்ளே சென்று வரமாட்டோம் கோவில் கோபுர தரிசனம் மட்டும் செய்வது உண்டு. குடும்பத்தார்களோடு சென்றதால் கோவிலுக்கு உள்ளே சென்று வந்தேன்.

உங்களுக்கு சொல்ல வந்த விசயத்தை சொல்லவருகிறேன். ஒரே நாளில் நாங்கள் தொடர்ச்சியாக பயணம் செய்து பார்த்துவிட்டு வந்தோம். நன்றாக பாருங்கள் பார்த்துவிட்டு வந்தோம் என்று சொல்லிருக்கிறேன். கோவிலுக்கு நீங்கள் சென்றால் அதுவும் நெடும்தூரம் பயணம் செய்து கோவிலுக்கு சென்று வந்தால் பயண களைப்பு உடலுக்கு ஏற்பட்டுவிடும். கோவிலுக்குள் சென்றால் இந்த களைப்பால் உங்களுக்கு கோவிலின் சக்தி கிடைக்காது.

நான் எனது குருவோடு சென்றால் முதலில் அவர் சொல்லுவது நன்றாக ஒய்வு எடுத்துக்கொள் அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லுவார். நமது உடல் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்க்கு செல்லும்பொழுது அங்குள்ள இடத்திற்க்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதற்க்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்திற்க்கு வழி செய்துக்கொடுப்பார் குரு. 

ஒவ்வொரு கோவிலிலும் தீர்த்தம் வைத்த இருப்பார்கள். சனிபகவான் கோவிலில் நளதீர்த்த்தில் நீராடிவிட்டு அதன் பிறகு தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளனர். உங்களின் உடலுக்கு புத்துணர்வு கொடுத்தபிறகு சாமி தரிசனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக இதனை வைத்துள்ளனர். 

நல்ல குரு ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்தால் இப்படி தான் செய்வார். உடலுக்கு புத்துணர்வு கொடுத்தபிறகு தான் ஆன்மீகத்தை கொடுப்பார்கள். நீங்களும் கோவிலுக்கு சென்றால் உடலுக்கு ஒய்வு கொடுத்தபிறகு சாமி தரிசனம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: