Followers

Thursday, March 24, 2016

கருகலைப்பு பரிகாரம்


ணக்கம்!
          காலையில் எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டனர். அந்த பதிவில் உள்ளவர்க்கு நான் தான் நல்லவழி செய்துக்கொடுத்தேன்.

அவர் ஒரு மருத்துவமனை அமைத்து தான் இந்த வேலை எல்லாம் செய்துவந்தார். அந்த மருத்துவமனையின் பெயரை மாற்றினேன். மருத்துமனையின் பெயர் சிவனின் பெயர் வருவது போல் செய்தேன். அதன் பிறகு அவர்களை அதாவது கணவன் மனைவி இருவரையும் சிவனின் பக்தர்களாக மாற சொன்னேன்.

நான் செய்த நேரத்தில் அவருக்கு என்று தனியாக அம்மனை வைத்து ஹோமம் செய்தேன். இது எனது அறையில் செய்தேன் அதில் அவர்கள் பங்குகொள்ளவில்லை அதற்கு உரிய தொகையை மட்டும் கொடுத்தார்கள். ஏன் என்றால் அவர்களை விடாமல் சிவன் கோவிலுக்கு செல்ல சொல்லிருந்தேன்.

மருத்துவமனையில் சிவனின் உருவம் பொறித்த வெண்கலசிலை வைக்க சொன்னேன். பொதுவாக நடராஜ சிலை வைத்திருப்பார்கள் ஆனால் நான் சிவனின் உருவசிலையை வைக்க சொல்லிருந்தேன். அதுவும் அவர்களுக்கு நன்றாக வேலை செய்தது என்று சொல்லலாம்.

அம்மனை வைத்து நான் அவர்களுக்கு வேலை செய்தாலும் அவர்களின் சிவவழிபாடு அவர்களின் பாவங்களை போக்கி அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்று சொல்லலாம். தற்பொழுது அவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தை இருக்கின்றது.

நீங்கள் இப்படிப்பட்ட பாவம் செய்து இருந்தால் சிவனின் பக்தர்களாக மாறி பல கோவிலுக்கு செல்லவேண்டும். புண்ணிய நதியில் நீராடவேண்டும். அப்படி செய்யும்பொழுது மட்டுமே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

இது எல்லாம் எவன்டா செய்துக்கொண்டிருப்பது என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் என்றால் நம் ஆட்களுக்கு உடனடியாக சொன்னவுடன் அது போகவேண்டும் சின்ன பரிகாரமாக சொல்லுங்கள் என்பார்கள்.

முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்து இருந்தால் நீங்கள் ஒரு கொலைக்காரன் என்பதை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். உலகமாக பாவம் என்ன என்றால் உங்களின் குழந்தையை நீங்கள் கொன்று இருக்கின்றீர்கள் என்பது உண்மை. இதனை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி இது தான் உண்மை. அளவில் சிறியது பெரியது எல்லாம் கிடையாது அது உங்களின் குழந்தை என்பது தான் நான் சொல்லமுடியும்.

என்னோடு பழகிய நண்பர்கள் எல்லாம் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டனர் அதாவது என்னை தொடர்புக்கொண்டு பேசிவிட்டனர்.  அவர்களுக்கு எல்லாம் இதனை நான் சொல்லி இருக்கிறேன்.

என்னிடம் வந்த ஒரு வாடிக்கையாளரின் அனுபவத்தை வைத்து உங்களுக்கு இதனை சொல்லிருக்கிறேன். ஒவ்வொரு சோதிடர்களுக்கும் பரிகாரம் வித்தியாசப்படலாம். ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கிறதோ அதனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: