Followers

Tuesday, February 11, 2020

சந்ததியை வாழவைக்கும் விரத முறை


வணக்கம்!
          நான் செல்லும் கோவில்கள் மற்றும் வழிபாடுகள் அனைத்தையும் பொதுவான இடத்தில் சொல்லுவதற்க்கு காரணம் அதனை நீங்களும் பின்பற்றி வரவேண்டும் என்பதால் இதனை சொல்லுகிறேன். ஒரு ஆன்மீகவாதி தன்னோடு கட்டுபாட்டில் தன்னை நாடி வருபவர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைப்பார்கள் அதற்கு மாறாக நான் அதனை செய்வதில்லை. ஏன் என்றால் நம்மை மீறி பல விசயங்கள் இருக்கின்றன இதனை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்பதால் இதனை வெளியில் சொல்லி செய்ய வைக்கிறேன்.

உங்களைப்பற்றி கவலை என்பதை விட உங்களின் சந்ததி அதிகம் தழைத்து வாழ்வதற்க்கு என்ன செய்யவேண்டுமே அதனை செய்துக்கொடுத்துவிடவேண்டும். நீங்கள் மட்டும் என்றால் உங்களை நமது அம்மன் சக்தியால் காப்பாற்றிவிடலாம். நம்முடைய நோக்கம் உங்களின் தலைமுறை நன்றாக வாழவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டுமாே அதனை செய்கிறேன்.

நீங்கள் மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது விஷேசமான நாட்களில் விரதம் இருந்து அந்த விரதத்தை கடைபிடித்தால் அது உங்களின் சந்ததியினரை தழைத்து ஓங்க செய்யும். உங்களின் வாரிசுகள் மிக பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள்.

நான் ஒரு சில காலக்கட்டத்தில் எல்லாம் விரதம் இருப்பது ஒழுங்காக ஒரு வழிபாடு செய்வது எல்லாம் பிடிக்காது ஏனோ தானோ என்று செய்துக்கொண்டு இருந்தேன். குரு வந்த பிறகு வழிபாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தினாலும் விரத முறையில் கவனம் இல்லாமல் இருந்தது. ஒரு சில சம்பங்களுக்கு பிறகு விரதமுறைகளிலும் நல்ல முறையில் கவனம் செலுத்தி வருகிறேன். இதனை நீங்களும் செய்தால் உங்களுக்கும் நல்லது.

உங்களுக்கு பிடித்த எந்த கடவுளாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு சிறப்பான நாளாக இருந்தாலும் சரி அதற்க்காக சிறப்பான வழிபாடு மற்றும் விரதத்தை கடைபிடிங்கள். உங்களுக்கு சிறப்பான ஒரு வாழ்க்கையும் மற்றும் உங்களின் வாரிசுகளுக்கு ஒரு சிறப்பான ஒரு வாழ்க்கையும் கொடுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

விரைவில் வீடியோ பதிவுகள் வர இருக்கின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: