Followers

Friday, February 21, 2020

மகாசிவராத்திரி


வணக்கம்!
         மகாசிவராத்திரி அன்று அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது சிவ வழிபாட்டை செய்ய சொல்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் சிவன் வழிபாட்டையும் செய்வேன் அதே நேரத்தில் சிவராத்திரி அன்று அம்மன் வழிபாட்டை செய்யும்பொழுது மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.

சிவராத்திரி அன்று அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் இருக்கும் அனைத்து ஊர்களிலும் திருவிழா நடைபெறும். சிவராத்திரி என்பது மற்ற அம்மனை விட அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பான ஒரு நாளாக இருப்பதால் தான் அன்று திருவிழா நடைபெறுகின்றது. இந்த நாளில் நீங்கள் அம்மனை வழிபடுங்கள்.

மாதம் மாதம் வருகின்ற சிவராத்திரி அன்று நீங்கள் வழிபட்டாலும் வழிபடலாம். மகாசிவராத்திரி அன்று நிறைய சக்தி அதாவது பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி பூமிக்கு வருவதால் அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். தியானம் அல்லது வழிபாடு செய்து இந்த சக்தியை உங்களுக்குள் கொண்டு வரமுடியும்.

சிவ வழிபாட்டை மேற்க்கொள்ளும் நண்பர்கள் உங்களின் வீட்டிலேய வழிபாடு செய்துக்கொள்ளலாம் அதனோடு உங்களின் அருகில் இருக்கும் சிவலாயங்களிலும் வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். உங்களின் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். நடராஜருக்கு அபிஷேகம் செய்து உங்களின் சிவராத்திரி பூஜையை மேற்க்கொள்ளலாம்.

மகா சிவராத்திரியை பற்றி ஒரு வீடியோ பதிவை தந்து இருக்கிறேன் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: