Followers

Friday, July 20, 2012

கடன் பரிகாரம் 1



வணக்கம் நண்பர்களே இப்பொழுது எனக்கு வரும் கால்களில் முக்கால் வாசி கடனை பற்றி தான் இருக்கிறது. எனக்கு கடன் தீருமா நான் எப்பொழுது இந்த கடனில் இருந்து விடுபடுவேன் என்று தான் கேட்கிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்க்காக ஒரு பரிகாரத்தை தருகிறேன். 

கடன் வாங்குவதில் பலவித கடன்கள் இருக்கின்றன. குடும்ப கடன், கல்வி கடன், வியாபார கடன்,மருத்துவ செலவு கடன், கோர்ட்க்கு போவதற்க்கு கடன், திருமண கடன் சூது ஆடுவதற்க்கு கடன்( சீட்டு ஆடுவது),போகத்திற்க்கு கடன், வீடு கட்ட கடன், தான் தோன்றி தனமாக செலவு செய்ய கடன் இப்படி கடன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

அட மக்கள் தான் கடன் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் அரசும் கடன் வாங்குகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஒருவிதத்தில் கடன்காரனாகதான் இருக்கின்றோம். இந்த அரசியல் வாதியால் சொந்த கடன் இல்லாதவனும் அரசால் கடன்காரனாகிறான்.

என்னை தேடிவருபவர்களில் கடனுக்கு பரிகாரம் கேட்டு தான் அதிகமாக வருகிறார்கள். அதிகம் பேர் வியாபார கடன்காரர்கள் இருக்கிறார்கள். வியாபாரம் செய்து பணத்தை இழந்து அதனால் கடன் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பரவாயில்லை தேடி வந்து விட்டார்கள் ஆனால் நல்ல முறையில் வியாபாரம் நடந்திக்கொண்டு இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

நல்ல நிலைமையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். ஏன் என்றால் எதிர்காலத்தில் கடன் பட்டியலில் உங்கள் பெயர் வரலாம் அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடன் இருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் கடன் வராமல் இருக்க ஒரு பரிகாரம் தருகிறேன். அதை செய்யுங்கள் உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்று சென்று வழிபட்டு வாருங்கள் உங்களை கடனில் இருந்து காப்பாற்றும் உங்கள் குலதெய்வம். வெகுதொலைவில் குலதெய்வம் இருப்பவர்கள் அந்த திசையை நோக்கி வீட்டில் இருந்து சாமி கும்பிடுங்கள். கடன் என்பது வராது.

ஒரு சில கடவுளுக்கு அமாவாசை தான் உகந்த நாளாக இருக்கும். அந்த நாள்களில் கூட நீங்கள் இதனை செய்யலாம். அமாவாசைக்கு செய்தாலும் கடன் வராது. அந்த தெய்வத்திற்க்கு இரண்டு நாட்களில் எந்த நாள் உகந்த நாளோ அந்த நாட்களில் நீங்கள் இதனை செய்யுங்கள்.

என்ன செய்வீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: