Followers

Wednesday, July 25, 2012

சனிக்கு பரிகாரம்



வணக்கம் நண்பர்களே சனி கிரகம் ஆறாம் வீட்டில் இருப்பது நல்லது தான் ஆனால் சனி கிரகம் நீசமாகவோ அல்லது பகையாகவோ அமரும்போது பல பிரச்சினைகளை ஏற்படுத்துவார். சனி கிரகத்திற்க்கு பல பரிகாரம் சொல்லுவார்கள். அவர் அவர் ஜாதகத்தை பொருத்து வேறுபடும்.

பொது பரிகாரமாக ஒன்றை சொல்லுகிறேன் செய்து பாருங்கள்.உங்கள் வீட்டில் நீங்கள் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நாளில் இதனை செய்யுங்கள். பாதி ஆண்கள் இப்பொழுது இதை தான் வீட்டில் செய்கிறோம் நீ வேற கிளப்பிவிட்டு இருக்கிறாய் என்று சண்டைக்கு வருவார்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதனை செய்யுங்கள்.  

நளன் ஒரு சமையல்காரனாக வேலை பார்த்தவர் தான் அவர் மூலம் தான் சனியின் பெருமைகளை நாம் அறிந்தோம். அவரே சமையல்காரனா வேலை பார்த்த போது நாம் ஏன் செய்ய கூடாது. இது ஒரு நல்ல பரிகாரம்.

எனக்கு கூட நல்ல சமைக்க தெரியும். நானும் சனி பகவான் தரும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க சமையலை கற்றுக்கொண்டேன். எனக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் இல்லை இருந்தாலும் அவர் தந்த கஷ்டத்தை அனுபவித்தவன் என்ற காரணத்தால் சமையலை கற்றுக்கொண்டேன்.

வீட்டில் இருந்தால் ஒய்வு நேரத்தில் கூட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து குடுங்கள். சமையலும் ஒரு கலை தான். தனிமையை விரட்ட கூட இந்த கலை நன்றாக உதவும். 

இதில் பெண்களாக இருந்தால் என்ன பரிகாரம் செய்வது என்று கேட்க தோன்றும். அவர்கள் எங்காவது உங்கள் உறவினர் வீட்டில் விஷேங்களுக்கு போய் சமைத்துகொடுங்கள். நல்ல முன்னேற்றம் தரும்.

ஆண் பெண் இருவரும் உங்கள் ஊரில் நடக்கும் குலதெய்வத்தின் கோவிலில் அன்னதானம் நடைபெறும் அல்லது உங்கள் ஊரில் வேறு ஏதாவது ஒரு கோவில் திருவிழாவில் அன்னதானம் செய்வார்கள் அந்த நேரத்தில் போய் இதனை செய்யலாம். பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும் போது சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தி செய்வார்கள். நீங்கள் போய் அவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லது பந்தியில் பரிமாறலாம்.

நான் பல திருமண விஷேங்கள் மற்றும் கோவில் திருவிழாவில் போய் உதவி செய்து இருக்கிறேன். வெட்க படாமல் இதனை செய்யலாம். கோவில் விழாகளில் அன்னதானம் நடைபெறும் போது நீங்கள் உதவி செய்ய போனால் நன்றாக குளித்துவிட்டு போய் உதவி செய்யுங்கள். பல கோவிலில் அன்னதானத்தை சாமிக்கு படையல் செய்துவிட்டு தான் அன்னதானம் செய்வார்கள் அதனால் நீங்கள் சுத்தமாக இருந்துக்கொண்டு உதவி செய்யுங்கள்.

சனியின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ள நல்ல வழி சொல்லியுள்ளேன். யாரும் என்னிடம் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். நல்ல பலனை அனுபவிக்கலாம். செய்து பாருங்கள் நண்பர்களே. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோதிடர் என்பது நடக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சமையல்காரர் இருப்பார் போல் தான் எனது மனது நினைக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Krish said...

அய்யா அவர்களுக்கு,
நான் எனது சிறு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நான் துலாம் இராசி. கடந்த 2 மாதமாக எனக்கு சமையல் கலையில் ஆர்வம் மிகுதியாக இருக்கிறது.
ஒவ்வொரு சனி கிழமையும் , நான் எனது பெற்றோருக்கு சமைத்து, பரிமாறுகிறேன் .முன்பெல்லாம் இது போன்று ஆர்வம் இல்லை.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தெரியவில்லை.அந்நாளில் எவ்வளவு நேரம் சமைத்தாலும் சோர்வு இல்லை.மனநிம்மதி ஏற்படுகிறது.

நன்றி.