Followers

Tuesday, July 3, 2012

தேர் திருவிழா



வணக்கம் நண்பர்களே என்னுடைய ஊர் அருகில் கரம்பயம் என்ற ஊரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் என்ற கோவில் உள்ளது. அந்த பகுதியில் புகழ் வாய்ந்த கோவில் அது. அந்த கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறும். 

நல்ல சக்தி வாய்ந்த அம்மன். அந்த கோவிலில் தேரோட்டம்  ரொம்ப விசேஷமாக நடைபெறும். நான் சிறுவயதில் இருந்தே அந்த கோவில் விழாவில் கலந்துக்கொள்வேன். இன்றைக்கும் அந்த தேரோட்டம் விழாவில் நல்ல கூட்டம் கூடும். 

இன்றைக்கு பல ஊர்களில் கோவில் விழாகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனால் அந்த தேரோட்டத்திற்க்கு கூட்டம் வருவதில்லை தேர் இழுப்பதற்க்கு ஆட்கள் இல்லை. யாரும் தேரை இழுப்பதற்க்கு போவதில்லை. 

எனது பள்ளி படிப்பு தேசிய மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் தான். அந்த பள்ளிக்கூடம் மன்னார்குடியில் இருக்கிறது. மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டத்தை தேசிய மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்கள் தான் இழுப்பார்கள். நான் படிக்கும் போது அந்த கோவில் தேரை இழுத்து இருக்கிறேன். 

அந்த காலத்தில் ஏதாவது ஒரு ஊரில் உள்ளவர்களுக்கு கரை என்று ஒதுக்கி இருப்பார்கள். நாள் ஆக ஆக அந்த ஊரில் இருந்தும் மக்கள் வருவதில்லை. அதனால் இழுப்பதற்க்கு மாணவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். என்ன என்று தெரியவில்லை. 

திருவாருர் தேர் அழகு என்று சொல்லுவார்கள் அந்த தேரோட்டத்தில் நான் கலந்து கொண்டது கிடையாது. இன்று பல ஊரில் உள்ள கோவில்களில் தேரோட்டம் நடைபெறுவது இயந்திரங்கள் துணைக்கொண்டு தான் நடைபெறுகிறது. மக்கள் இருந்தாலும் இழுப்பது இல்லை.

நான் சின்ன வயதில் பார்த்த தேர்க்கும் இப்பொழுது தேர்க்கும் உயரத்தில் வித்தியாசங்கள் நிறைய காணப்படுகிறது. அப்பொழுது தேரை எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் ஆனால் இன்று தேரை அந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தெரியவில்லை. உயரத்தை குறைத்துவிட்டார்கள்.

அந்த காலத்தில் உள்ளவர்கள் ஏன் கோவில் விழாக்களில் அதுவும் முக்கிய நிகழ்வாக ஏன் தேரோட்டத்தை வைத்து இருப்பார்கள் அந்த விழாவில் ஏதாவது ஒரு மிக பெரிய தெய்வ சக்தி கிடைப்பதால் தான் வைத்து இருப்பார்கள்.

இன்றைய மக்கள் அதை பயன்படுத்துவது இல்லை. தேர்களில் பார்த்தீர்கள் என்றால் அந்த தேரில் உள்ள சிற்பங்களில் அனைத்து தெய்வங்களின் சிற்பங்களும் செதுக்கி வைத்து இருப்பார்கள். அழகுக்கு என்று கிடையாது. அந்த கோவில் தெய்வத்தோடு அனைத்து தெய்வங்களும் சேர்ந்து நமக்கு அருள் தருவதாற்க்காக தான். அந்த கோவில் தெய்வத்தை நாம் இழுக்கும் போது கூடவே அனைத்து தெய்வங்களும் சேர்த்து இழுப்பதால் நமக்கு எல்லா தெய்வத்தின் அருளும் கிடைக்கும். 

உங்களுக்கு ஒரு வருடத்திற்க்கு விபத்து நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் ஊரில் உள்ள கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுக்க வேண்டும். 

உங்கள் ஊரில் தேர் திருவிழா நடைபெறவில்லை என்றால் அருகில் இருக்கும் கோவிலில் வருடத்திற்க்கு ஒரு முறை கலந்துக்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் ஏதாவது காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் முதலில் கோவிலில் தேரோட்டத்தில் கலந்து கொண்டு எனக்கு இவ்வாறு நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு தேரை இழுங்கள் அந்த காரியம் அடுத்த தேர் திருவிழாவிற்க்குள் நடைபெற்று விடும்.

பெண்களாக இருந்தால் அந்த தேரின் வடத்தை இழுக்கும் போது தொட்டு கும்பிடலாம் அல்லது தேர் வரும் வழியில் ஒரு தேங்காயில் சூடத்தை ஏற்றி தேரில் உள்ள தெய்வத்திற்க்கு தீபம் ஏற்றி தேங்காயயை சிதறகாயக உடைக்கலாம்.

இந்த பதிவு ஆறாவது வீட்டு தசாவிற்க்கு நல்ல பரிகாரம்.

என்ன உங்கள் ஊரில் உள்ள தேர் திருவிழாவில் கலந்து கொள்வீர்களா?


அன்புடன்

ராஜேஷ்சுப்பு. 



No comments: