Followers

Wednesday, September 12, 2012

சிம்மம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே சிம்ம ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலனை தரும் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கும்பம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் கும்ப ராசியின் அதிபதி சனி. சிம்மத்தில் அதாவது லக்கனத்தில் சம்பந்தபட்டு தசா நடைபெற்றால் சனிக்கு இந்த வீடு பகை

திருமண முயற்சி செய்தால் எளிதில் நடைபெறாது. கடும் போராடத்திற்க்கு பிறகு திருமணம் நடைபெறும். காதல் செய்தால் வீட்டிற்க்கு தெரிந்து தந்தை மூலம் பிரச்சினை ஏற்படும். திருமணம் நடைபெற்றவர்கள் கணவன் மனைவிக்கு பூசல் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது கன்னிராசி வருகிறது அதன் அதிபதி புதன்.  சனிக்கு இந்த வீடு நட்பு.

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமண பேச்சு மாமன் மூலம் நடைபெற்று விரைவில் திருமண ஏற்பாடு நடைபெறும். கூட்டு தொழில் கமிஷன் தொழிலாக இருந்தால் அரசாங்க வாய்ப்பு வரும் அதன் மூலம் நல்ல பணவரவு பெறமுடியும். திருமண முடிந்தவர்கள் சந்தோஷமான குடும்பவாழ்க்கை அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு மூன்றாவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சனிக்கு இந்த வீடு உச்சம்.

கூட்டுதொழில் நல்ல முன்னேற்றம் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் உடனடியாக நடைபெறும். திருமணம் மூலம் சந்தோஷ வாழ்க்கை அமையும். அடிக்கடி இன்பபயணம் அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்ம்த்திற்க்கு நான்காவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு பகை.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாட்டில் சண்டை ஏற்படும்.  திருமணம் நடைபெற்றவர்கள் உங்கள் துணைவர் உங்கள் தாயுடன் சண்டை சச்சரவு ஏற்படும். தீயால் உங்கள் துணைவருக்கு காயம் ஏற்படும். உங்கள் வீட்டில் வாகனங்கள் இருந்தால் விபத்துகளை சந்திக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு ராசி அதன் அதிபதி குரு. சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் காதல் மணமாககூட நடைபெற வாய்ப்பு இருக்கும். துணைவர் மூலம் வருமானம் வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்க ஆறாவது வீடாக வருவது மகரராசி அதன் அதிபதி சனி. சனி சொந்த வீடு

சனி சொந்த வீட்டில் இருந்து தசா நடைபெறுவதால் நன்மையான பலனையே தரும் இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்தால் நன்மை பயக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்க ஏழாவது வீடாக கும்பராசி வருகிறது. சனியின் சொந்த வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். தம்பதிக்குள் ஒற்றுமையாக வாழ்வார்கள். சந்தோஷமான வாழ்க்கை அமையும். துணைவரின் பேச்சை கேட்டு நடப்பார் அதனால் பிறர் கண்களில் அடிமையாக வாழ்கிறார் என்று எண்ணம் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமண ஏற்பாடு சிக்கலை தரும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குடும்ப வாழ்வில் சி்று பிரச்சினை ஏற்படும். துணைவர் சொல் பேச்சு கேட்கமாட்டார் அவர் இஷ்டம் போல் வாழ்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மேஷ ராசி அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு நீசம்.

பெரியோர்களின் ஆசி கிடைக்காது. அதை இந்த காலத்தில் யார் எதிர்பார்த்தார்கள். முன்னோர்களின் ஆசி கிடைக்காது என்று சொல்ல வேண்டியது நல்ல இருக்கும். திருமண ஏற்பாடு கால தாமதம் ஆகும். உங்கள் மனது அதனால் தொந்தரவுகளை சந்திக்கும். குடும்ப வாழ்வும் திருப்தி தராது.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது ரிஷப ராசி அதன் அதிபதி சுக்கிரன். சனிக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் நீங்களாகவே பெண்ணை பார்த்துக்கொள்வீர்கள் எப்படி என்றால் உங்கள் அலுவலகத்திலேயே அந்த பெண் வேலை செய்யலாம் நீங்களே பார்த்து பேசி முடித்துவிடுவீர்கள். உங்கள் துணைவரால் உங்களுக்கு வருமானம் உயரும் இரண்டு பேர் சம்பாதிப்பது என்றால் சும்மாவா. உங்கள் துணைவரால் உங்கள் மதிப்பு உயரும் மொத்தத்தில் இந்த தசா யோகம் தரும் தசா என்று சொல்லலாம்.


ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பதினொராவது வீடாக மிதுனம் ராசி வருகிறது அதன் அதிபதி புதன் சனிக்கு இது நட்பு வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வரும் துணைவரால் பொருள் சேர்க்கை உண்டு. சந்தோஷமான குடும்பவாழ்க்கை அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சனிக்கு இந்த வீடு பகை.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாட்டில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். திருமண நடைபெற்றால் உங்கள் துணைவர் இந்த காலகட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிவரும். கையில் இருக்கும் பணம் எல்லாம் செலவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

MANI said...

ராஜேஷ் பொதுப்பலன்களை தான் எல்லா நூல்களிலும் கொடுத்திருக்கிறார்களே அவற்றை பதிவிடுவதால் உங்கள் நேரமும், வேலையும் தானே அதிகமாகும்.

அதைவிட குறிப்பிட்ட ஜாதகங்களை உங்கள் அனுபவத்தில் அலசினால் பல உபயோகமான தகவல்கள் ஜோதிட ஆர்வலர்களுக்கு கிடைக்குமே.

உங்களைப் பற்றியும் உங்கள் ஜோதிட ஞானத்தையும் மற்றவர்கள் அறிந்து பயனடைய வாய்ப்பு கிடைக்குமே. முயன்று பாருங்கள்.

அவ்வாறு அலசினால் ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் இங்கு வந்து அவர்களது கோணத்தில் அலசுவார்கள் வகுப்பறையை போல.

rajeshsubbu said...

//* MANI said...
ராஜேஷ் பொதுப்பலன்களை தான் எல்லா நூல்களிலும் கொடுத்திருக்கிறார்களே அவற்றை பதிவிடுவதால் உங்கள் நேரமும், வேலையும் தானே அதிகமாகும்.

அதைவிட குறிப்பிட்ட ஜாதகங்களை உங்கள் அனுபவத்தில் அலசினால் பல உபயோகமான தகவல்கள் ஜோதிட ஆர்வலர்களுக்கு கிடைக்குமே.

உங்களைப் பற்றியும் உங்கள் ஜோதிட ஞானத்தையும் மற்றவர்கள் அறிந்து பயனடைய வாய்ப்பு கிடைக்குமே. முயன்று பாருங்கள்.

அவ்வாறு அலசினால் ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் இங்கு வந்து அவர்களது கோணத்தில் அலசுவார்கள் வகுப்பறையை போல. **/

நம்ம பதிவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைவு இப்பொழுது இது போதும் கொஞ்ச நாட்கள் சென்றவுடன் நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கலாம்.