Followers

Wednesday, September 19, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் மந்திர அனுபவங்களைப்பற்றி பார்க்கலாம். மந்திரங்களை பொருத்தவரை அனைத்தும் பொதுவாகத்தான் இருக்கின்றன ஆனால் அதை பயன்படுத்துவதற்க்கு தான் பயிற்சி இல்லாமல இருக்கிறார்கள்.

இன்று நெட்டில் ஆன்மிக தளங்களை எடுத்துக்கொண்டால் அனைத்திலும் ஏதாவது ஒரு மந்திரத்தை தந்து அனைவருக்கும்  அதை பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

உங்களுக்கு மந்திரங்களை விட யோக தியானத்திற்க்கு என் மனம் செல்லுகிறது என்றால் யோக தியானம் கற்றுக்கொள்ளலாம். அனைத்தும் கடவுளிடம் தான் நம்மை கொண்டு செல்லுகிறது.

மந்திரங்களை எப்படி பயன்படுத்தலாம் என்று அனைவரும் என்னிடம் ஜாதகங்களை அனுப்பியுள்ளார்கள் அனைவருக்கும் நான் பார்த்து சொல்லுவது என்றால் எனக்கு நேரம் கண்டிப்பாக கிடையாது.

உங்களுக்கே சோதிடம் தெரியும் அதை வைத்து பார்த்துக்கொள்ளலாம். பொதுவாக குரு கிரகம் மந்திர சாஸ்திரத்திற்க்கு மிகவும் உதவி செய்யக்கூடிய கிரகம். ஒரு ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மந்திரங்களை உடல் வாங்கிக்கொள்ளும் குரு பகை வீட்டில் இருந்தால் தாந்திர மந்திரங்கள் உங்களுக்கு நன்றாக வரும். குரு நீசமாக இருந்தால் மந்திரங்கள் மீது ஈடுபாடு இருக்காது.

மனக்காரகன் சந்திரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் மனது அமைதி அடைந்து மந்திரங்களை உரு ஏற்ற முடியும். மனது ஒரு நிலையில் இருக்க வேண்டும் என்று தான் பல சாமியார்கள் போதை வஸ்துக்களை கையில் எடுப்பார்கள். மனது ஒரு நிலைக்கு வருவதற்க்கு போதையை சொல்லிவிட்டார் என்று நீங்கள் முடிவு எடுத்துக்கொண்டு போதையில் இறங்கிவிடாதீர்கள்.

யோக வகுப்பில் மூச்சு பயிற்சி செய்வார்கள் அது எதற்கு என்றால் இதயத்தை சரிசெய்து தியானத்தை கற்று தருவார்கள். இதயத்தில் தான்  முக்கால் வாசி மேட்டர் இருக்கிறது அதனால் அதனை செய்ய சொல்லுவார்கள். இதை எல்லாம் செய்த பிறகு தான் மந்திரங்களை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். நடைமுறையில் இது எல்லாம் யாரும் கவனத்தில் கொள்ளாமல் அப்படியே சொல்லி கொடுக்கிறார்கள் அதனால் தான் மந்திரங்கள் ஒன்றும் வேலை செய்வதில்லை.

மந்திரங்களை உருஏற்றுவதற்க்கு விடியற்காலை நல்ல நேரமாக இருக்கும் நாம் விடியற்காலையில் எழுவது என்றால் பிடிக்காத ஒன்றாக இருக்கும். முடிந்தவரை விடியற்காலையில் எழுந்து செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் அப்படி வசதி இல்லை என்றால் ஒரு சில குடும்பத்தில் நிறைய பேர் இருக்கலாம் அப்பொழுது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் அந்த மாதிரி இருந்தால் முதல் மூன்று நாட்கள் மட்டும் விடியற்காலையில் எழுந்து செய்யுங்கள் பிறகு அதற்கு என்று நீங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு அந்த நேரத்தில் செய்யுங்கள் போதுமானது.

சோதிடத்தில் விடியற்காலையில் எழுவதற்க்கு என்ன சொல்லியுள்ளார்கள் என்றால் சூரியன் லக்கனத்தில் இருக்க வேண்டும் அல்லது பத்தாவது வீட்டில் இருக்க வேண்டும் அல்லது பதினொராவது வீட்டில் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே ஒருவர் சூரியனை வரவேற்பதற்க்கு இருப்பார் என்று சொல்லியுள்ளார்கள்.

மந்திரங்களில் பொதுவாக சாதுவான தெய்வங்களாக எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். சிவனையும் பெருமாளையும் எடுக்காதீர்கள் அது எல்லாம் நீங்கள் ஆன்மிகத்தில் பெரிய இடத்திற்க்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

மந்திரங்கள் உரு ஏற்றும் போது முதலில் விநாயகரே வணங்கிவிட்டு உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு ஆரம்பியுங்கள் மந்திரங்களை முடிக்கும் போது ஆஞ்சநேயரை நினைத்து முடியுங்கள்.

மந்திர வரிகளை சொல்லி தாருங்கள் பலரும் கேட்டார்கள் நீங்களே ஒரு மந்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் மந்திரத்தின் முதலில் ஓம் என்று ஆரம்பிக்க வேண்டும் மந்திரங்கள் முடியும் போது கண்டிப்பாக ஓம் என்று முடிக்ககூடாது.

 ஒரு தவறான மந்திரத்தை உங்களுக்கு சொல்லுகிறேன் அப்பொழுது எளிதில் விளங்கும்.

ஓம் சங்கரா சங்கரா ஓம்

ஓம் என்பது உலகின் முதல் ஆரம்பம் அதனை கண்டிப்பாக போடவேண்டும். சங்கரா சங்கரா என்று இரண்டு தடவை சிவனின் நாமத்தை உச்சரிக்கிறீர்கள்
சிவனை என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ஒன்று அவரை வர சொல்ல வேண்டும் அல்லது அவரை நீங்கள் புகழ வேண்டும்.

நமக்கே பிரச்சினையில் தான் அவரை கூப்பிடுகிறோம் கூப்பிடுவதிலேயே பிரச்சினை இருந்தது என்றால் அவ்வளவு தான் மனம் அமைதி அடைவதற்க்கு பதிலாக பைத்தியம் பிடித்து சடைமுடியுடன் தெருவில் தான் அலையவேண்டும். சாஸ்திரங்களில் ஓம் என்று முடிக்கமாட்டார்கள். நம அல்லது நமக என்று வரும். ஒரு சில வார்த்தைகளும் வரும் நீங்களே தேடினால் கிடைக்கும்.

இது எல்லாம் எப்படி செய்வது என்று யோசனை தோன்றுகிறதா ஒரு நல்ல குரு உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் கல்லாக இருந்தாலும் சிலையாக உங்களை செதுக்கிவிடுவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

kavin said...

iyya vanakkam,
thanthira manthirangal endral enna? guru vakra katheyil erunthal enna palan?