Followers

Thursday, September 6, 2012

மிதுனம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் இப்பதிவில் மிதுன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஏழாம் வீட்டு தசா நடந்தால் என்ன பலன் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

மிதுனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது தனுசு. அதன் அதிபதி குரு. ஏழாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால். குருவிற்க்கு இந்த வீடு பகை வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும்.திருமணம் காதல் திருமணமாக கூட முடியும் அப்படி இல்லை என்றால் அவர்களே போய் துணையை தேர்ந்தெடுத்துக்கொள்வார். திருமணம் நடந்து முடிந்திருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படும். கூட்டு தொழில் செய்து வந்தால் இவரின் பங்குதாரார் இவரின் பேச்சை கேட்பார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். குருவிற்க்கு இந்த வீடு உச்சம்.

துணைவர் மூலம் பணம் வரும். குடும்பத்தின் பொறுப்பை துணைவர் ஏற்று நடத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவரின் உறவினர் மூலம் லாபங்களை அடைவான்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது சிம்மம். குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு

அடிக்கடி பயணங்கள் மூலம் கணவன் மனைவி இருவரும் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். வீட்டை மாற்றிக்கொண்டு புது வீட்டுக்கு போவார்கள். இளைய சகோதர் உங்களுக்கு உதவுவார்கள்.

ஏழாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு நான்காவது வீடாக வருவது கன்னி குருவிற்க்கு இந்த வீடு நட்பு

நல்ல சுகத்தோடு வாழ்க்கை செல்லும். துணைவர் மூலம் வீடு கட்டும் யோகம் வரும். வாகன யோகம் வரும். உங்கள் துணைவர் உங்கள் தாயாரிடம் அன்பாக நடந்துக்கொள்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது துலாம். குருவிற்க்கு இந்த வீடு பகை.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் காதல் திருமணம் நடைபெறும். திருமணம் தகராறில் முடியும். தாம்பத்திய சுகம் தராது. பணம் தங்காது.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது விருச்சிகம் குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் தடைப்படும் திருமணத்தில் சண்டை ஏற்படும். திருமணம் நடைபெற்ற தம்பதிகளாக இருந்தால் இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். கூட்டுதொழில் நஷ்டத்தை சந்திக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையாது.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது தனுசு குருவின் சொந்த வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். இவர் மனைவியிடம் அடிமையாக இருக்கவேண்டிய நிலை ஏற்படும். கூட்டு தொழில் லாபம் தரும். துணைவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது மகரம். குருவிற்க்கு இந்த வீடு நீசம்.

துணைவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும். துணைவரின் செல்வவளம் குறையும். துணைவரால் உங்களுக்கு அவமானம் நடைபெறும். குடும்பத்தை நடத்தும் திறமையை இழக்க வேண்டிவரும். தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது கும்பம் குருவிற்க்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் வீட்டில் உள்ள மூத்தவர்கள் மூலம் திருமணம் நடைபெறும். துணைவர் பாக்கியத்தால் உங்களுக்கு சொத்துகள்,ஆபரணங்கள் கிடைக்கும். குடும்பத்தாரால் உங்களுக்கு மதிப்பு வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மீனம் குருவிற்க்கு இந்த வீடு சொந்த வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வரும் துணைவரால் உங்கள் வாழ்க்கையில் தொழில் வளம் அதிகரிக்க செய்யும். ஏதாவது ஒரு அலுவலகத்தில் இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வு வரும். துணைவர் மூலம் வருமானம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு பதினொன்றாவது வீடாக வருவது மேஷம் குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் சொத்து, நகைகளுடன் உங்கள் துணைவர் வருவார். துணைவரால் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் மூத்த சகோதரரால் லாபம் ஏற்படும். நண்பர்களும் உதவிகரம் நீட்டுவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மிதுனத்திற்க்கு பனிரெண்டாம் வீடாக வருவது ரிஷப ராசி குருவிற்க்கு இந்த வீடு பகை

துணைவரால் அதிக செலவு ஏற்படும். துணைவர் அதிகமாக ஊர் சுற்றுவதில் நாட்டம் கொள்வார். சொத்துக்கள் சேதம் ஏற்படும். தூக்கம் அதிகமாக இருக்கும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: