Followers

Thursday, September 20, 2012

கன்னி : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

கன்னி லக்கினத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மீன ராசி அதன் அதிபதி குரு அவர் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் மிகுந்த மகிழ்ச்சியை தரும். இந்த தசா முழுவதும் நன்மை தரும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கன்னி ராசிக்கு இரண்டாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன் குருவிற்க்கு இந்த வீடு பகை வீடு

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் குடும்பவாழ்க்கையில் தகராறு நடைபெறும். தனவரவு குறைவாக இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு மூன்றாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் இளைய சகோதர் வழியில் வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் நல்ல மகிழ்ச்சி நிலவும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு நான்காவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. குருவிற்க்கு இந்த வீடு சொந்த வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வண்டி வாகனம் யோகம் வரும். வீட்டில் சந்தோஷம் நிலவும். வீடு கட்டும் நிலை ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மகரம் மகரம் ராசியின் அதிபதி சனி. குருவிற்க்கு இந்த வீடு நீசம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாடு தாமதம் ஆகும். வருமான குறைவு ஏற்படும். குழந்தை பாக்கியம் தாமதம் ஆகும். மனதில் படபடப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஆறாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. குருவிற்க்கு இந்த வீடு சமம்.

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமண தடை ஏற்படும். திருமண நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும். வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறாது.

ஏழாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஏழாவது வீடு மீனம் அதன் அதிபதி குரு. குருவுக்கு இந்த வீடு சொந்தவீடு.

திருமண ஏற்பாடு நடைபெறும் திருமண நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கூட்டு தொழில் ஆரம்பிக்கும் காலமாக இருக்கும். நல்ல பணவரவு இருக்கும்.

ஏழாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு எட்டாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு

திருமண ஏற்பாடு தடை ஏற்படும். திருமண ஏற்பாட்டில் தகராறு ஏற்படும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். கூட்டு தொழில் லாபம் தரும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஒன்பதாவது வீடாக ரிஷப ராசி வருகிறது. அதன் அதிபதி சுக்கிரன் குருவிற்க்கு இந்த வீடு பகை வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண ஏற்பாடு ஒரு பெண் மூலம் நடைபெறும். கூட்டுத்தொழில் பிரச்சினையை தரும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும்.

ஏழாம் வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு பத்தாவது வீடாக மிதுன ராசி வருகிறது அதன் அதிபதி புதன். குருவிற்க்கு இந்த வீடு பகை.

திருமண ஏற்பாடு பிரச்சினை வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து பிரிய நேரிடும். தொழிலும் வருமானம் வராது. ஆயுளுக்கு பங்கம் வராது.

ஏழாம் வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு பதினொராவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். குருவிற்க்கு இந்த வீடு உச்சம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் உடனடியாக திருமணம் நடைபெறும். திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர்களாக இருப்பார்கள். திருமணத்தால் நல்ல வருமானம் சொத்துக்கள் சேரும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

ஏழாம் வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு பனிரெண்டாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமணத்திற்க்கு அதிக செலவு செய்வீர்கள். உங்கள் துணைவரால் செலவு இருக்கும். வருமானமும் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 





No comments: