Followers

Wednesday, September 5, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே கடந்த வாரம் ஒருவர் ஒரு பதிவில் ஒரு கதை எழுதிருந்தார் அதனை நான் படித்தேன்.  அதனை உங்களுக்கு சொல்லுகிறேன். ஒருவன் ஒரு பெரிய பாலத்தில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தானாம் அப்பொழுது அந்த லேப்டாப் தவறி தண்ணீரில் விழுந்துவிட்டது  அந்த பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு அழுதான்.

அப்பொழுது ஒரு தேவதை வந்து அவனிடம் கேட்டது அவன் நடந்த விபரத்தை சொன்னான் உடனே தேவதை தண்ணீருக்குள் சென்று ஒரு பென்டிரைவ் போன்ற ஒரு கருவியை எடுத்து கொண்டுவந்து இவனிடம் நீட்டியது அதற்கு அவன் இது கிடையாது என்று சொன்னான். தேவதை மறுபடியும் தண்ணீருக்குள் சென்று ஒரு கால்குலேட்டர் அளவு உள்ள ஒரு கருவியை எடுத்து வந்து இவனிடம் கொடுத்தது அதனை பார்த்த இவன் இது கிடையாது என்று சொன்னான்.

கடைசியாக அவனுடைய லேப்டாப்பை எடுத்துகொடுத்தது அவன் மகிழ்ச்சியுடன் வாங்கிகொண்டான். அந்த தேவதை போகும் போது அவனை பார்த்து சிரித்தது அதற்கு ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டான் உனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைக்காதே. எல்லாத்தையும் கற்றுவிட்டோம் என்றும் நினைக்காதே நான் கொடுத்த இரண்டு பொருட்களும் எதிர்காலத்தில் வரக்கூடிய கணிணி அதன் விலை பல மில்லியன் என்று சொல்லிவிட்டு இரண்டையும் எடுத்துக்கொண்டு மறைந்தது.  இது தான் அந்த கதை.

இப்படி தான் எல்லா மனிதரும் இருக்கிறோம் நமக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற நினைப்பு வந்துவிடுகிறது.இந்த நினைப்பை நீங்கள் முதலில் அகற்ற வேண்டும்.

நீங்கள் மந்திரங்களை சொல்லும் போது நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உற்று கவனியுங்கள் அப்பொழுது தான் உங்களுக்கு அதன் சக்தி தெரியவரும். எப்பொழுதும் இப்படி தான் அந்த சக்தி வரும் என்று கற்பனை செய்யாதீர்கள். இந்த கலியுகத்தில் கடவுள் மனித உருவத்தில் தான் வருவான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. 

ஒரு குருவிடம் சென்றால் அவர் மூலம் நமக்கு என்ன பலன் நடக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும். நம்மை உயர்த்த என்ன வழி என்று தான் யோசிக்க வேண்டும். நான் ஆன்மிகத்தில் இருப்பவர்களை சந்தித்தால் அவர்களிடம் இருந்து ஏதாவது ஒரு விசயத்தையாவது கற்க வேண்டும் என்று நினைப்பேன் அவர்களின் குணங்களை நான் பரிசோதனை செய்வதில்லை. அவர்கள் எப்படியாவது இருக்கிறார்கள் நமக்கு கிடைத்ததா அது போதும் என்று நினைப்பவன்.

என்னுடைய குரு சொல்வார் ஒவ்வொரு சாமியாருக்கும் ஏதாவது ஒரு விசயத்தில் தவறு செய்வார்கள் அதை நாம் கேட்ககூடாது என்று சொல்லுவார். ஒவ்வொருவருக்கும் ஒரு கெடுதல் குணம் இயற்கையாகவே அமைந்துள்ளது. கவுண்டமணி சொல்வது போல "கோழி குருடாயிருந்தாலென்ன குழம்பு ருசியா இருக்கா பாருங்க" அது ஒன்று தான் நமக்கு முக்கியமான ஒன்று.

இந்த இடத்தில் உங்களுக்கு மனதில் ஒன்று தோன்றும் அது என்ன என்றால் அவரை அவர் சரிசெய்யமுடியாமல் இருந்தால் ஏன் அவர் ஆன்மிகத்தில் இருக்கவேண்டும். ஒருவன்  முழுவதும் அறிந்துவிட்டால் அவன் இங்கு இருக்கமாட்டான்.

இப்பொழுது ஒரு முக்கிய விசயத்தை நாம் பார்க்கலாம் நமது ஆட்கள் மந்திரங்களுக்கு உதவ மை செய்வார்கள். ரசமணி செய்வார்கள். ஒரு தேவதை நம்மிடம் இருக்க வேண்டும் என்று நினைத்து அந்த தேவதைக்கு ஏற்ப பல மூலிகைகளை சேர்த்து செய்வார்கள். அல்லது அடுத்தவரை வசியம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை செய்யலாம் இதன் நோக்கம் பல உள்ளது.

இது எல்லாம் தேவையற்ற ஒன்று. ஒருவரை வசியபடுத்த நீங்கள் கற்ற மந்திரங்களே போதுமான ஒன்று தான். எப்படி என்றால் அவரின் மனதை உங்களிடம் இருக்கும் சக்தியால் கட்டுபடுத்த முடியும். இந்த வசிய மை ரசமணி எல்லாம் தமிழ்நாட்டு சாமியார்கள் தான் வைத்திருப்பார்கள் ஏன் என்றால் அவனை அவன் நம்புவதில்லை. இதில் எப்படி இதை தயார் செய்வது என்று கிளாஸ் எடுத்துக்கொண்டு இருப்பார்கள். நம்ம ஆட்களின் ஆன்மிகம் இப்படி தான் இருக்கும்.

நீங்களே பார்த்து இருக்கலாம் சதுரகிரிக்கு சென்றால் அங்கு உள்ள மரங்களை பார்த்தால் ஒவ்வொரு மரத்தையும் தோலை உரித்து தான் நம்ம ஆட்கள் வைத்திருப்பார்கள்.

நீங்களே போகும் வழியில் ஏதாவது ஒரு மரத்தை லேசாக அதன் தோலை எடுத்துவிட்டு சென்றுவிட்டு திரும்பி வரும் போது பார்த்தீர்கள் அந்த மரத்தில் ஒரு தோல்கூட இருக்காது. எதற்கு எடுக்கிறோம் என்று கூட தெரியாமல் அனைத்தையும் பிரிச்சி மேய்ந்துவிடுவார்கள் நம்ம ஆட்கள். நம்ம மக்கள் நல்லவர்கள் தான். இங்கு இருக்கும் ஆன்மீகவாதிகள் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மூலிகைகளுக்கு நான் எதிரிகிடையாது. அதை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களால் முடியாதா போது அதனை பயன்படுத்துங்கள். ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை போக்குவதற்க்கே அவ்வளவு பாட படவேண்டிருக்கிறது இதில் போய் மூலிகையின் தோஷத்தை எல்லாம் வாங்கிக்கொள்ளாதீர்கள்.

நான் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன். நம்ம தமிழக சாமியார்கள் வெளிமாநிலத்தில் இருக்கும் மடங்களுக்கு செல்வது. பொதுவாக மடங்களில் சாதுகளுக்கு தங்கும் இடம் உணவு அவர்கள் செல்லும் யாத்திரைக்கு தகுந்தவாறு பணம் எல்லாம் தருவார்கள்.

நம் ஆட்கள் ஒரு மடத்திற்க்கு போவது அங்கு மூன்று நாட்கள் தங்குவது. காசிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் தரும் அனைத்தையும் வாங்கிகொண்டு அடுத்த மடத்திற்க்கு செல்வது இப்படியே காலத்தை ஓட்டுவது. அடுத்ததடவை அந்த மடத்திற்க்கு செல்ல இரண்டு வருடங்கள் ஆகும். ஒரே மாநிலத்தில் சுற்றிக்கொண்டு இருப்பது தான் இவர்களின் வேலை. கடைசி வரை காசிக்கு செல்வதில்லை.

நம் ஆட்கள் செய்யும் வேலை இது தான். ஒவ்வொரு மாநிலத்திலும் ஏகாபட்ட மடங்கள் இருக்கின்றன மக்கள் தாராளமாக பணம் தருகிறார்கள். தமிழ்நாட்டில் மடங்கள் குறைவு தான்.

இந்த பதிவுகளே நான் எழுதகூடாது சாமியார்கள் தான் எழுதவேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்னை மாதிரி ஆசாமிகள் எழுதிகொண்டு இருக்கிறோம். 

நீங்கள் அனைத்து பிளாக்கையும் தேடிப்பாருங்கள் என்னை மாதிரி ஆசாமிகள் எழுதிக்கொண்டு இருப்பார்கள். சாமியார்கள் எழுதும் பிளாக்கை பார்த்தால் சோதிட வகுப்புக்கு 15000 கோவில் தரிசனத்திற்க்கு 25000 என்று வாங்கிக்கொண்டு பிழைப்பை நடத்துவது தான் வேலையாக வைத்திருக்கிறார்கள்.

மநதிர அனுபவங்கள் தொடரும்...


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: