Followers

Saturday, September 22, 2012

சந்தேகங்கள்வணக்கம் நண்பர்களே நமது நண்பர்கள் மந்திர அனுபவங்கள் பற்றி பல கேள்விகளை கேட்டுள்ளார்கள்  சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாக இந்த பதிவு


மணி

மந்திர சாஸ்திரங்கள் பற்றி ஒரு கேள்வி எனக்கு இதன் மேல் விருப்பம் உள்ளது வெறும் மந்திர சாஸ்திரங்களால் ஒருவர் உயர்நிலையை அடையமுடியுமா அல்லது யோக தியானம் கற்றபிறகு அடையமுடியுமா தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்.

வணக்கம் மணி யோக தியானத்தை விட இதில் உயர்நிலையை அடைய பல வழிகள் உள்ளன. இன்று நடத்தும் யோக தியானத்தில் எத்தனை பேர் உயர்நிலையை அடைகிறார்கள் ஒருவர் கூட கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நடத்திக்கொண்டு இருக்கும் சாமியார்கள் பெயர் தான் வெளியில் வருகிறது கற்பவர்கள் ஒரு பெயர் கூட வெளியில் வருவதில்லை. 

ஐயப்பன்

 நான் சாமியாராக வேண்டும் அதற்கு ஒரு எளிய வழியை சொல்லுங்கள்?

எங்கேயோ கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கிறீர்கள் நான் சாமியார் கிடையாது என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் கேட்ட கேள்வியை பார்த்தால் போலி சாமியாராக ஆக ஆசைபடுகிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை சொல்லுகிறேன். நீங்கள் இந்து மதத்தில் உள்ள ஏதாவது ஒரு வேதத்தை கற்றுக்கொள்ளுங்கள் வேதங்கள் படிப்பதற்க்கு கடினமான இருந்தால் அதனை தமிழில் படிக்க நிறைய நூல்கள் வந்துவிட்டது. வாங்கி படியுங்கள்.

ஒரு உபநிஷத்தை நீங்கள் கற்றலே சுமாராக முப்பது வருட காலம் நீங்கள் தொடர்ச்சியாக உரை ஆற்றலாம். அதனை நீங்கள் படித்து பொருளை அறிந்தால் அப்பொழுது இதுவரை சாமியாரகள் ஆற்றிய உரைகள் எல்லாம் இங்கு இருந்து தான் எடுத்து இருக்கிறார்கள் என்பது புரியும்.

தமிழிலும் நிறைய நூல்கள் வந்துவிட்டன. பகவத்கீதை கூட இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்று எங்கோ படித்த ஞாபகம்.

இதை எல்லாம் படித்துக்கொண்டு சும்மா கண்ணை மூடிக்கொண்டு உட்காருங்கள் நீங்கள் தான் அடுத்த பிரபல சாமியார். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

எங்கேயாவது போய் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இதற்கு யார் காரணம் என்று கேட்டால் என்னை மாட்டிவிட்டுடாதீர்கள் அப்புறம் நான் சிறை அனுபவம் என்று புதிய தொடர் ஆரம்பிக்க வேண்டும்.

பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்

நான் கோடிஷ்வரராக ஆக வேண்டும் மந்திரங்களில் அதற்கு வழி இருக்கிறதா?

தமிழனைப்பார்த்து ஏன் உலகத்தில் உள்ளவன் பயப்படுகிறான் என்று இப்பொழுது தான் தெரிகிறது. உடனடியாக நீங்கள் கோடிஷ்வரர் ஆக வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள் உங்களுக்கு சுயதொழிலிலும் இல்லை என்று கூறியுள்ளீர்கள் முதலில் உங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எந்த தொழில் உங்களுக்கு சரிவரும் என்று பாருங்கள் அதன் பிறகு அந்த தொழிலை தொடங்குகள் அதன் பிறகு மந்திரங்களை பயன்படுத்தி உங்கள் தொழிலை நன்றாக செல்ல வையுங்கள் கண்டிப்பாக நீங்கள் கோடிஷ்வராக வருவீர்கள். திடீர் என்று வருவதாக இருந்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் இதனை தான் செய்வார்கள். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

murugan said...

ஐயா வணக்கம்,
உண்மையை உரைக்கின்றேன் இது என்னில் எந்தவித எதிர்பார்பும் இன்றி செய்த விஷையம் 90களில் ஏதாவது ஒரு மந்திரத்தை உறு போடுவேன் மனம் ஒருமித்தது பலன் PR & SONS லிருந்து மாதவரம் தபால்பெட்டி போகவேண்டிய நான் சென்ட்ரலில் இறக்கி விடப்பட்டுலேன் சிறிதுநேரம் கழித்துதான் என்னை உணர்ந்தேன். டிக்கெட் எடுக்கமே அமைதியாய் இருந்தா இறக்கிவிடம வேற என்ன பண்ணுவா வாயை தேரக்கமட்டியா என்று அருகிலிருதவர் திட்டினான். பஸ்ஸில் 1 ½ மணி நேரம் நீக்கணுமே என்று நினைத்து அந்த நேரத்தில் உறு போட்டது என் தப்பு. Union conference விஷையமாக Chennai லிருந்து Bhopal லுக்கு செல்லவேண்டிய நான் direct train கிடைக்காமல் போகவே IRARSI JUNCTION இல் 4 மணி நேரம் தங்க வேண்டியதாயிற்று அந்த நேரத்தில் மந்திர உறு போட்டேன், பலன் டிரைன் ஐ தவற விட்டேன். பிறகு எப்படியோ போய் சேர்ந்தேன். பிறகு காலை 7 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான், அலாரம் வைத்து நான்கு மணிக்கு எழுந்தேன், இயற்கை உபாதை மிக எளிதாகவே, அதனை முடித்து, முகம் அலம்பி பின் மந்திர உறு போடுவேன். முதலில் உடம்பில் வலி தெரியும், பிறகு நகரும், அதனில் முனைந்து உறுபோடுவேன், பிறகு வண்ணங்கள் வெளிப்பட்டன, அதனில் முனைந்து உறுபோடுவேன், பிறகு மூச்சு மேல் கவனம் செலுத்தி உறுபோடுவேன், பிறகு குதத்தை உள்பக்கமாக இழுத்து, இரண்டில் மேல் கவனம் செலுத்தி உறுபோடுவேன், பிறகு கருப்பு வண்ணம் மட்டுமே தெரிந்தது. அதில் உறு போடுவேன், இதனை 2000 லிருந்து 2007 வரை செய்து வந்தேன், திடீரென்று ஒருநாள் வெள்ளை நிறமும் ஓரங்களில் வெறிய அரெஞ்சு வடிவமும், ஒரு ஷணம். தெரிந்தது, என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, என் மனைவி பின் பிடரியை அழுதிருக்கிறாள். அப்பொழுதுதான் நான் எழுந்தேன் சுமார் 4 மணியிலுருந்து 7.30மணி வரை எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அன்றிலுருந்து இன்றுவரை நான் தியானமோ மந்திரமோ செய்வதில்லை, பயம் வந்துவிட்டது. தொடர மனம் ஒப்பவில்லை. இது தவறாரான பயிற்சி குருமூலம் இல்லை,

G R MURUGAN BSNL

suresh kumar said...

பெருமதிப்பிற்குரிய ஐயா,
நான் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவனாவேன். நான் பிறந்த நேரம்12-07-1982 இரவு 10-45pm என்று எனக்கு ஜாதகம் எழுதியுள்ளனர்.அதன்படி எனக்கு கும்ப லக்கினம்,மீன ராசி ஆகும். ஆனால் கணிப்பொறியில் எனது பிறந்த தேதியை இட்டு பார்த்த பொழுது மீன லக்கினம் மீன ராசி என்று காட்டுகிறது. இவை இரண்டில் எது சரி என்று தாங்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.

நன்றிகளுடன்,
சுரேஷ்குமார்