Followers

Wednesday, February 3, 2016

பாக்கியஸ்தான பரிகார விளக்கம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சொல்லப்படும் கருத்தை ஒத்து இன்று ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் அதனை சொல்ல வாய்ப்பாக அமைந்தது. பாக்கியஸ்தானம் பாதிக்கப்படும்பொழுது அது பித்ருதோஷம் என்று சொல்லப்படுகிறது.

பித்ருதோஷம் என்றவுடன் நாம் முன்னோர்களுக்கு செய்வதை வழக்கமாக எடுத்துக்கொள்வோம். அதில் எள்சாதத்தை மக்களுக்கு கொடுப்பது ஒரு பழக்கமாக வைத்து இருப்பார்கள். நம் பாவம் மக்களுக்கு சேருவதற்க்கு இது ஒரு வழியாக இருக்கின்றது. உண்மையில் இப்படி செய்யும்பொழுது ஒரு ஆள் பாதிக்கப்படுகிறான்.

குடும்பத்தில் வாழ்பவர்களுக்கு கொடுக்கும்பொழுது நமது பாவம் அவர்களின் குடும்பத்தை சேரும். நம்மால் அடுத்த குடும்பம் பாதிக்கப்படைய கூடாது. நம்மால் வாழ்ந்ததாக தான் இருக்கவேண்டும்.

எள் சாதத்தை பொறுத்தவரை சாமியார்களுக்கு கொடுக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கலாம் அதனை தவிர வேறு யாருக்கும் கொடுக்கவேண்டாம்.

நண்பர் நெட்டில் படித்ததாக சொன்னார். யார் சொன்னாலும் அதனை அப்படியே நம்பவேண்டாம். நான் சொன்னால் கூட நம்பாதீர்கள். அதனை உங்களின் வாழ்வில் ஈடுபடுத்தி பார்த்துக்கொண்டு அதன் பிறகு செயல்படுத்தலாம்.

திருவள்ளூவர் கூட இப்படி தான் சொல்லியுள்ளார்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

குறள் விளக்கம்

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

நல்ல முறையில் சிந்தித்து பார்த்துவிட்டு அதன் பிறகு செயல்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: