Followers

Saturday, December 22, 2018

தசாவால் பாதிப்பா?


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நாம் வழிபடும் தெய்வம் நம்மை பெரும் துன்பத்தில் இருந்து நம்மை காப்பாற்றும். ஏதோ ஒரு தெய்வத்தை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் நம்முடைய பெரிய தோஷத்தை கூட போக்கி நல்ல வாழ்க்கையை தரும்.

ஒரு சிலர் தொடர்ச்சியாக ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருவார்கள். ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு அவர்களுக்கு நடக்கும் தசா அவர்களை மாற்றும் ஒரு சிலருக்கு மட்டும் தொடர்ச்சியாக வணங்கி வருவது போல செய்யும். ஒரு சிலருக்கு தெய்வத்தின் அனுக்கிரகம் இருக்கும் ஆனால் தொடர்ச்சியாக வழிபாடு இருக்காது.

நாம் சம்பாதிக்கும் அனைத்தும் வருகின்ற தசா எடுக்கலாம் ஆனால் நம்முடைய ஆன்மீகத்தன்மையை மட்டும் எந்த தசாவும் எடுக்காது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். சொத்து பணம் எல்லாம் இடையில் வருவது ஆன்மீகம் என்பது பல ஜென்மங்களாக தொடரும் ஒரு பந்தம் என்று சொல்லலாம்.

பல நண்பர்கள் கூட என்னிடம் கேட்டு இருக்கின்றனர் குரு தசா போய்விட்டால் ஆன்மீகம் போய்விடுமா என்று கேட்பார்கள். எந்த தசா வந்தாலும் உங்களிடம் இருக்கும் ஆன்மீகம் மட்டும் உங்களை விட்டு செல்லாது.

ஒவ்வொரு தசாவிலும் நடந்த நல்ல விசயங்கள் உங்களை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வரும் ஆனால் அதனை நாம் தான் கண்காணிப்பதில்லை. பல நல்லதும் கெட்டதும் தொடர்ச்சியாக வருகின்றது இதனை சற்று சிந்தித்து கண்காணித்து பார்த்தால் அட எதுவும் நம்மை விட்டு செல்லவில்லை என்பது உங்களுக்கு தெரியும்.

ஆன்மீகத்தின் தன்மை என்பதை ஆழ்ந்து நாம் பார்த்தால் அது நம்மை விட்டு செல்லாது என்பது உங்களுக்கு புரியும். ஆன்மீகத்தில் தொடர்ச்சியாக பயிற்சிகளை செய்து வாருங்கள்.

இன்று திண்டுக்கல் செல்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: