Followers

Friday, June 15, 2012

வில்லாதி வில்லன் 4



வணக்கம் நண்பர்களே! நாம் ஒரு வீட்டை எடுத்தால் அதில் ஏகாபட்ட விஷயங்கள் இருக்கின்றன என்னால் எழுத முடிந்தவரை எழுதுகிறேன் நீங்களும் படிக்க முடிந்தவரை படியுங்கள். 

ஒரு வீட்டை எடுத்தால் இவ்வளவு புதையல் வரும் போது நாம் தசாவில் அடுத்த வீட்டையும் சேர்த்து எழுத வேண்டியபொழுது எவ்வளவு புதையல் வரும் என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம். 

ஆறாம் வீட்டு தசா நடந்து அதன் அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டால் என்ன நடக்கும் என்று கடந்த பதிவில் பார்த்து வந்தோம் அதன் தொடர்ச்சியாக இப்பதிவிலும் பார்க்கலாம். 

மூன்றாவது இடம் இளைய சகோதரரை காட்டும் இடம் என்பதால் இளைய சகோதருக்கும் இவருக்கும் எப்பொழும் சண்டை இருந்துக்கொண்டே இருக்கும். இருவருக்கும் எப்பொழுதும் ஒத்துப்போகாது. 

இருவரும் சண்டை இட்டுக்கொண்டு பஞ்சாயத்து அல்லது கோர்ட் படி ஏறி கொண்டு இருப்பார்கள். இதில் மாமனும் சேர்ந்து கொண்டு உங்களுக்கு எதிராக கொடி பிடிப்பார். இளைய சகோதரியாக இருந்தாலும் பிரச்சினை தான் மாமனுக்கும் உங்கள் இளைய சகோதரிக்கும் ஒரு லிங் இருக்கும்.அல்லது அவனே திருமணம் செய்து கொண்டு ஓடி போய்விடுவான்.

இந்த மூன்றாம் வீட்டை பற்றி சொல்லும் போது சிறு தூரப்பயணத்தைப் பற்றி சொன்னேன் அல்லவா நீங்கள் சிறுதூர பயணம் செய்தால் விபத்துக்கள் ஏற்படும். இது அடிக்கடி நிகழும். தசா நாதனை பொருத்து உங்கள் ஜாதகத்தின் கிரகங்கள் சரியில்லை என்றால் சில சமயம் மரணம் கூட ஏற்படலாம். 

சில பேருக்கு பஸ்யில் செல்லும் போது உயிர் பிரியும் அதற்கு இந்த தசாதான் முக்கியம் மரணத்தை பற்றி எழுதும்போது அதை எல்லாம் பார்க்கலாம் அதுவரை பொறுமை தேவை. நான் எழுதுவது ஆறாவது வீடும் மூன்றாவது வீட்டை வைத்து எழுதுகிறேன். 

ஒரு ஜாதகத்தில் பலனை முடிவு செய்வது என்பது மிக சிரமமான விஷயம் கோடி கணக்கான விபரங்கள் விதிகள் அடங்கி உள்ளன அதை எல்லாம் மனதில் கொண்டுவந்து தான் பலனை முடிவு செய்ய முடியும் அதை முதலில் நீங்கள் நம்புங்கள். சோதிடம் படித்தால் மட்டும் வந்துவிடாது அதற்கு என்று தனி சக்தி வேண்டும். 

கடவுள் மனிதனை ஒவ்வொரு துறைக்கும் தனித்தன்மையாக படைக்கிறாறோ அதே போல் தான் சோதிடராக ஆவாதற்க்கும் தனித்தன்மையுடன் படைக்கிறார். நீங்கள் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் ஜாதகத்தை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவரின் ஜாதகத்தை பார்க்க வேண்டாம்.

இன்றைய தேதியில் சோதிடம் என்பது அனைவரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அனைவரும் சோதிடராக வருவது என்பது கஷ்டம் தான். நான் பார்த்தவரை குரு திசையில் உள்ளவர்கள் தான் சோதிடத்தை படிக்கிறார்கள் மற்ற அனைவரும் கொஞ்ச நாள் படிப்பார்கள் அதோடு விட்டுவிடுவார்கள்.

இதில் கூட நீங்கள் கடவுளின் தன்மையை சோதித்து பார்க்கலாம். ஒருவருக்கு குரு தசா அல்லது ஆன்மீக விஷயத்தில் நாட்டம் இல்லாத ஜாதகனை பார்த்து நான் சோதிடத்தை பற்றி உனக்கு வகுப்பு எடுக்கிறேன் என்று சொல்லுங்கள் பலனை சொல்லாதீர்கள் பலனை கேட்பதற்க்கு அனைவருக்கும் விருப்பம் இருக்கும் சோதிட பாடத்தை நடத்துங்கள் பத்து நிமிடத்தில் அந்த ஆள் தூங்கிவிடுவார் அதான் சோதிடத்தின் தன்மை.

வேறு துறைக்கும் ஆன்மீக துறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வேறு துறைகளில் தவறு செய்தால் அது வெளியில் தெரிவது என்பது அந்த அளவுக்கு மோசம் போகாது கடவுள் தண்டனை கொடுப்பார் ஆனால் அந்தளவுக்கு மோசமான தண்டனை இருக்காது அந்த தண்டனை அவர் வாழ்விலேயே கொடுக்கலாம் அல்லது அடுத்தபிறவியில் கொடுக்கலாம்.

ஆன்மீக துறையில் தவறு செய்தால் அவன் கண் முன்னே அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதாகிவிடும். அப்பொழுது கடவுள் மிகுந்த துயரத்தை அனுபவிக்க வைத்துவிடுவார். நீங்களே பார்த்து இருக்கலாம் இன்றைய நிலையில் எத்தனை பேர் அதனை அனுபவிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் அதாவது தினசரி பேப்பரில் பார்த்து இருக்கலாம்.

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்.அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: