Followers

Monday, June 11, 2012

சதாசிவ மலை



வணக்கம் நண்பர்களே! உங்களை சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டது. நான் தஞ்சாவூர் இருந்து சென்னை வந்தவுடன் உடனே சதாசிவ மலை சென்றுவிட்டேன். இந்த பயணம் திடிர் என்று வந்துவிட்டது. சதாசிவ மலை சென்றது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது இந்த மலையை பற்றி நான் கேள்வி பட்டது கூட கிடையாது.

சென்னை வந்தவுடன் நான் சோதிட வேலையை முதலில் தொடங்குவது என்று நினைத்து வந்தேன் ஆனால் ஒரு சில சாமியார்கள் எனக்கு தொடர்பு ஆனார்கள் அவர்கள் உடனே என்னை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்கள். அந்த சாமியார்கள் முதலில் அறிமுகமானதும் அன்று தான் அவர்களிடம் நான் இதற்கு முன்பு பேசியது கூட கிடையாது.

என்னுடைய சோதிட வாடிக்கையாளர் ஒருவர் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார்கள் அவர்களை நான் சந்தித்த உடன் அவர்கள் என்னை உடனே வாருங்கள் சதாசிவ மலை செல்லலாம் என்று சொன்னவுடன் நானும் கிளம்பிவிட்டேன்.

சதாசிவ மலை ஆந்திர மாநிலத்தில் உள்ளது. அந்த மலையை சதாசிவ கோனை என்றும் சொல்லுகிறார்கள். அங்கு சென்றதும் இரவில் மலையை ஏறதொடங்கினோம். மலை ஏறுவது கொஞ்சம் கடினம் தான் இருந்தாலும் நல்ல அனுபவம் தான். 

மலையில் சதாசிவம் இருக்கும் அருகில் ஒரு அருவி உள்ளது அந்த அருவியில் குளிப்பது எல்லையற்ற ஆனந்தத்தை தருகிறது.குளியலை முடித்துவிட்டு சாதசிவத்திற்கு நமது கைகளால் அபிஷேகம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. 

அந்த பாக்கியத்திற்க்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. அங்கு அர்ச்சகர்கள் யாரும் கிடையாது நாம் தான் செய்ய வேண்டும். அங்கு அம்மன் சந்நதியும் உண்டு அதற்கு கொஞ்சம் மலை ஏறவேண்டும். அங்கு ஒரு அருவி உள்ளது. அம்மனை தரிசித்துவிட்டு வந்தோம். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.

நமது மக்கள் எங்கு சென்றாலும் அந்த இடத்தை நாசம் செய்ய தொடங்கிவிடுவார்கள் அது இப்பொழுது இருந்து அங்கு தென்படுகிறது இயற்கையின் தன்மையில் இருக்கும் போது தரிசிப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

என்னுடன் வந்து சாமியார்கள் உரையாடியது அனைத்தும் உங்களுக்கு பதிவுகளில் நல்ல அனுபவமாக தருகிறேன்

சென்னை வந்துவிட்டேன் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Unknown said...

அந்த கோவில் ஸ்தல புராணம் பற்றி பகிரவும்