Followers

Friday, June 29, 2012

யாருக்காக கடன் ? நிறைவு பகுதி



வணக்கம் நண்பர்களே யாருக்காக கடன் வாங்குவார்கள் என்று கடந்த பதிவில் பார்த்து வந்தோம் அதன் தொடர்ச்சி இப்பதிவில் 

கடந்த காலத்தில் பார்த்தீர்கள் என்றால் கடன் வாங்கி விட்டால் கடன் வாங்கியவர்கள் அதனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று அந்த பாடுபடுவார்கள். கடன் கொடுத்தவர் கேட்கும் முன்பு பணத்தை கொடுத்துவிடவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலையில் பார்த்தால் கடன் கொடுத்தவன் தான் செத்தான் அவன் வாங்குவதற்க்குள் அந்த பாடு படவேண்டும். 

கடன் பட்டார் நெஞ்சம் போல கழங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று சொல்லுவார்கள். இப்பொழுது எல்லாம் அதைப் பற்றி யாரும் கவலைபடமாட்டார்கள். கொடுத்தவன் தான் கழங்கி நிற்கவேண்டும் அப்படி ஆகிவிட்டது. ஆனால் ஒரு சிலர் பாதிப்படைகிறார்கள் அவர்கள் வாங்குவது தண்டல் கொடுப்பவர்களிடம். அவர்களிடம் வாங்கினால் அவர்கள் அடி ஆட்களை வைத்து பணத்தை வாங்கிவிடுவார்கள்.

மக்களின் மனம் மாறிவிட்டது எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கடன் கொடுத்தவன் கேட்ககூடாது என்று நினைக்கிறார்கள். சாதாரண மக்கள் தான் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்றால் பெரிய பணக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் அவர்கள் வங்கியையே திவால் ஆக்கிவிடுகிறார்கள். இப்படி இருக்கிறது இன்றைய நிலை. நாம் கடனைப் பற்றி தான் பார்த்து வருகிறோம். இப்பொழது நாம் ஆறாவது வீட்டு தசாவிற்க்கு போவோம். 

ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டு அதிபதியுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர் குழந்தைக்காக கடன் படும் நிலை ஏற்படும். இன்றைக்கு பல பேர் தங்கள் குழந்தைக்காக தான் கடன் வாங்குகிறார்கள். அந்த குழந்தையை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் வாங்கி நல்ல நிலைக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் அந்த பெற்றோர்களை கவனிப்பதில்லை. 

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன் வழக்குகாக அல்லது தன்னுடைய தேர்தல் செலவுக்காக கடன் பெறுவார்கள். 

ஆறாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர் தன்னுடைய தொழில் நண்பருக்காக கடன் வாங்குவார். தன்னுடைய மனைவிக்காக கடன் வாங்குவார்.

சில பேர் மனைவிக்கு கடன் வாங்கி கொடுத்துவிட்டு மாட்டிக்கொள்வார்கள். மனைவி அவரை விட்டு போய்விடுவார். என்னடா மனைவி கூட விட்டு விட்டு போய்விடுவார்களா என்று இது தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மக்கள் வசிக்கும் அயல்நாடுகளில் இந்த விஷயங்கள் அடிக்கடி நிகழ்கிறது. இது அனுபவ உண்மை.

ஆறாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மரணத்திற்க்காக கடன் ஏற்படும் நிலை வரும். என்னடா மரணத்திற்க்காக என்று கேட்க தோன்றும் உண்மையில் மரணத்திற்க்கு செய்யும் செலவுக்காக கடன் ஏற்படும். 

தமிழ்நாட்டு கிராமங்களில் பார்த்தீர்கள் என்றால் அங்கு மரணம் ஏற்பட்டுவிட்டால் அவர்களின் சக்தி தக்கவாறு செலவு செய்வார்கள். சில பேர் அதில் கூட பந்தாவிற்க்காக செலவு செய்வார்கள். சில பேர் மரண செலவுக்கு சொத்தை கூட விற்று இருக்கிறார்கள். அங்கு நடக்கும் கூத்து இருக்கிறதே அந்த மாதிரி இருக்கும். அதை எழுதிக்கொண்டே போகலாம். உங்கள் பொறுமை கருதி அதை எழுதவில்லை.

ஆறாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன்னுடைய தந்தைக்காக கடன் ஏற்படும் அல்லது தன் குழந்தையின் உயர்கல்விக்காக கடன் ஏற்படும். தொலை தூர பயணங்களுக்காக கடன் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர் தொழிலுக்காக கடன் வாங்குவார்கள். கடன் வாங்கி தொழில் ஆரம்பிப்பார்கள் அல்லது நடந்துகொண்டு இருக்கும் தொழிலுக்காக கடன் வாங்குவார்கள்.

ஆறாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டு அதிபதியுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன்னுடைய மூத்த சகோதர சகோதரிகளுக்காக கடன் வாங்குவார்கள். தன் மருமகனுக்காகவும் கடன் வாங்குவார்கள்.

நான் சென்னை அண்ணா நகரில் ஒருவரை இப்படி சந்தித்து இருக்கிறேன். அவர் ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரி அவர் மருமகனுக்காக பல கோடிகளை கடன் வாங்கி மாட்டிக்கொண்டார். அவர் இப்பொழுதும் அதில் இருந்து மீளமுடியவில்லை. அந்த மருமகன் சொந்த தொழில் செய்கிறேன் என்று சொல்லி அனைத்து பணத்தையும் விட்டுவிட்டான். அவருக்கு வில்லன் மருமகன் உருவத்தில் வந்து இருக்கிறான்.

ஆறாம் வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மருத்துவசெலவுக்காக கடன் ஏற்படும் நிலை உருவாகும். தன்னுடைய பெண் தோழிகளுக்காக கடன் ஏற்படும். கீப்பிற்க்காக கடன் வாங்கி செலவு செய்வார்கள். 

நீங்கள் தொழில் முறை சோதிடராக வந்தால் அனைத்தையும் பார்க்கலாம். சந்தனமும் உங்களை வந்து பார்க்கும் சாக்கடையும் உங்களை வந்து சந்திக்கும். அனைத்தையும் சமபடுத்தி தான் நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். என் அனுபவத்தை சொல்லுகிறேன் பல பேர் என்னிடம் வந்து கேட்பது ஏதாவது வசிய மருந்து இருக்கிறதா என்று தான் கேட்கிறார்கள். அடுத்தவரை எப்படியாவது வசியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்.

என்ன நண்பர்களே கடன் எதற்கு வாங்குகிறார்கள் யாருக்காக வாங்குகிறார்கள் என்பதை ஆறாம் வீட்டு தசாவுடன் ஒப்பிட்டு எழுதியது சரிதானே. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

அடுத்த பதிவில் ஆறாம் வீட்டு தசா பற்றி பல தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: