Followers

Saturday, June 2, 2012

வில்லன்டா


வணக்கம் நண்பர்களே நான் இன்னும் எனது ஊரில் இருந்து சென்னை வரவில்லை சோதிட வேலையாக தான் இங்கு உள்ளேன். கூடிய விரைவில் சென்னை வந்துவிடுவேன். எனது சோதிட வாடிக்கையாளர்கள் நேரிடியாக பழக்கம் உண்டு நான் அவர்களுக்கு சோதிடம் சொல்லுவது பலித்து அவர்கள் அடுத்தவர்களிடம் போய் சொல்லி என்னிடம் சோதிடம் கேட்க வருவார்கள். 

ஆனால் எனது பதிவு மூலம் என்னிடம் சோதிடம் கேட்பவர்கள் எனது சோதிட பதிவை வைத்துதான் வருகிறார்கள் பதிவு மூலம் வந்தவர்கள் என்னை பார்த்தது கூட கிடையாது ஆனால் என்னிடம் பதிவு மூலம் என்னை நம்பி வருகிறார்கள் அவர்களுக்காக நான் எங்கு சென்றாலும் பதிவு எழுதவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். எனது சுயபுராணம் போதும் விஷயத்திற்க்கு வருகிறேன். 

நாம் தசாபுத்திகளை பார்த்து வந்தோம் அல்லவா. அதைக்குறித்து ஒரு உண்மை சம்பவத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன். நான் சோதிட சம்பந்தமாக அனைத்து ஊர்களுக்கும் செல்லுவது வழக்கம். அப்படி ஒரு ஊருக்கு செல்லும் போது நடந்த சம்பவத்தை சொல்லுகிறேன் கேளுங்கள். 

அந்த ஊர் நெல்லைக்கு பக்கத்தில் உள்ளது . அந்த ஊர் எதற்கு எடுத்தாலும் சண்டை சச்சரவு நிறைந்த ஊர். பக்கத்து வீட்டு கோழி இவர்கள் வீட்டிற்க்கு வந்தாலும் சண்டை ஏற்பட்டு விடும். 

அந்த சண்டையில் குறைந்த பட்சம் ஒரு தள்ளுமுள்ளுனாலும் நடக்காமல் இருக்காது. அந்தமாதிரி சண்டையில் மீது அவ்வளவு ஈர்ப்பு அவர்களுக்கு. அந்த மாதிரி ஊர்களில் போய் சோதிடம் பார்ப்பது அவ்வளவு கடினமான காரியம். ஒரு சோதிடன் ஊரின் தன்மையும் கவனத்தில் கொண்டுதான் சோதிடம் சொல்லவேண்டும் இல்லை என்றால் சோதிடன் பாடு திண்டாடம் தான்.

இந்த மாதிரி ஊர்களில் உயிருக்கு கூட ஆபத்து வந்துவிடும். நீங்கள் மனதில் நினைக்கிறது எனக்கு தெரிகிறது. ஏன் அந்த மாதிரி ஊர்களில் போய் சோதிடம் பார்க்க வேண்டும். சொம்மாக இருக்கலாம் அல்லவா என்ன செய்வது எல்லா ஊர்களிலும் போய் சோதிடம் சொல்லுவது ஒரு தனியான அனுபவம் தான்.

அந்த ஊரில் ஒருவர் அமைதியாக யாரிடமும் சண்டை செய்யாமல் இருந்தார். சொல்ல போனால் அந்த ஊரில் அவர் பிறந்திருக்ககூடாது. அப்படிபட்ட ஆள். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தார். அந்த ஊரில் இரண்டு பேர்கள் தனி தனியாக பிரிந்து கோஷ்டி சண்டை செய்து வந்தார்கள்.

 எதற்கு எடுத்தாலும் இரண்டு கோஷ்டிகளும் மோதிக்கொள்ளும். எந்த பிரச்சினை என்றாலும் இரண்டு கோஷ்டிகளுக்கும் மோதல்தான். இரண்டு கோஷ்டியில் ஒரு பிரச்சினைக்கு எதிர் கோஷ்டியில் இருந்த ஒருவரை கொலை செய்து விட்டார்கள். 

இதனை பழி தீர்க்க கொலையுண்ட கோஷ்டினர் தயார் நிலையில் இருந்தார்கள். ஒரு நாள் நமது அமைதியான நபர் அருகில் இருக்கும் நகரத்திற்க்கு சென்றுவிட்டு தாமதமாக வீட்டிற்க்கு திரும்ப இரவு ஆகிவிட்டது. 

பஸ்யில் இருந்து இறங்கி இவர் வீடு வருவதற்க்கு ஒரு கிலோ மீட்டர் இருக்கும். கொலையுண்ட கோஷ்டியின் ஆள்கள் எதிர்கோஷ்டியை தாக்க பதுங்கி இருந்தார்கள். நல்ல இருட்டு ஏற்பட்டது வருவது யார் என்று கூட தெரியவில்லை அமைதியான ஆளை அந்த கோஷ்டியில் இருந்த நபர் என்று தெரியாமல் போட்டு தள்ளிவிட்டனர். சம்பவ இடத்திலேயை இவரின் உயிர் பறிபோனது. 

அமைதியான நபர் சம்பந்தமோ இல்லாமல் கொலை செய்யப்பட்டார். அவரின் ஜாதகத்தை நான் பார்த்து உள்ளேன். கொலை நடக்கும் நேரத்தில் அவருக்கு ஆறாவது வீட்டின் தசை நடந்துகொண்டு இருந்தது. ஆறாவது வீட்டின் தசை நடக்கும் போது இந்த மாதிரி தான் சிலபேருக்கு நடக்கும் சம்பந்தமோ இல்லாமல் மாட்டிக்கொள்ளுவார்கள்.

 இந்த மாதிரி எண்ணற்ற கொலைகள் நடந்து உள்ளன. நீங்களும் இந்த மாதிரி பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு எல்லாம் ஆறாவது வீடு சம்பந்தம் பட்டு இருக்கும். என்ன நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாமா .

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: