Followers

Saturday, June 16, 2012

குழந்தை பாக்கியம்



வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நாம் பார்க்கபோவது குழந்தை பாக்கியத்தை பற்றி தான். ஆறாவது தசாவை பற்றி பார்த்துக் கொண்டு இருக்கும் போது இடையில் இது ஏன் என்று கேட்கலாம். 

நான் இலவச சோதிட மூலம் பல பேர்களுக்கு சோதிட பலன் சொன்னேன் அவர்களில் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்னார்கள். ஒரு சிலர் எனக்கு எப்பொழுது குழந்தை பாக்கியம் இருக்கும் என்று கேட்டு இருந்தார்கள்.

நான் பலன் சொன்னவர்களில் மூன்று நபருக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் இருக்கிறது என்று எனக்கு e-mail செய்தார்கள். அவர்கள் மூலமும் உங்களுக்கு ஒரு சில கருத்துக்களை பகிரலாம் என்று தான் இப்பதிவை எழுதினேன். 

நீங்கள் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கடவுளிடம் மனமார வேண்டி இருப்பீர்கள். அதனால் கடவுளும் மனம் இறங்கி உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருளிருப்பார். முதலில் உங்கள் கடவுளுக்கு நன்றியை சொல்லுங்கள்.

ஒரு பெண் முழுமை பெறுவது அவள் தாய்மை பாக்கியம் அடைந்தால் தான் என்று சொல்வார்கள். என்ன தான் பணம் இருந்தாலும் திருமணம் ஆனவுடன் அவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கையே இருள் அடர்ந்துவிடும்.

இந்த சமுதாயமும் அவர்களை கேள்வி கேட்டே தொலைத்து எடுத்துவிடுவார்கள். அதிலும் பெண்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அவ்வளவு டார்ச்சர் இருக்கிறது. நான் பல குடும்பங்களில் இந்த நிகழ்வை பார்த்து இருக்கிறேன். ஆண் பிள்ளைக்கு பிரச்சினை இருக்கும் ஆனால் அவனை விட்டுவிட்டு அந்த பெண்ணை மட்டும் குறைகூறுவார்கள். 

உங்களுக்கு குழந்தை இல்லை என்றால் நீங்கள் அனைவரும் ஏன் சோதிடர்களும் குருவை வணங்க சொல்லுவார்கள். அது என்னமோ சரிதான் ஆனால் குரு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு அருளமாட்டார். அவரிடம் கடுமையான போராட்டத்திற்க்கு பிறகு தான் பயன்பெற வேண்டியதாகிறது இது அனுபவத்தில் இப்படி தான் இருக்கிறது. 

உங்கள் ஊர்களுக்கு பக்கத்திலேயே சில குழந்தை வரம் தரும் தெய்வம் என்று சொல்லிருப்பார்கள் அது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கு தான் தெரியும் நான் அந்த கருத்துக்கு வரவில்லை.

குழந்தை வரம் வேண்டும் என்றால் கர்மகாரகனை பிடித்தால் தான் உங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை கிடைக்கும். கர்மகாரகன் சனிபகவான் இவர் உங்களுக்கு கர்மம் செய்வதற்க்காகவது மனம் இறங்கி குழந்தை பாக்கியத்தை அருளுவார். ஏன் என்றால் இந்த பூமியில் பிறந்தால் நீங்கள் முக்தி அடைந்தவுடன் உங்கள் இரத்தம் சம்பந்தம் பெற்ற ஒருவர் தான் உங்களுக்கு முக்திக்கு கர்மம் செய்ய வேண்டும். அதனால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு குழந்தையை அவர் அருளுவார். 

சில நேரங்களில் சனி பகவான் உங்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரைக்குள் குழந்தை பாக்கியத்தை தருவார் ஆனால் நமக்கு இளமையில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். அதற்க்கு ஒரு வழி இருக்கிறது.

அது என்ன ?

நம்ம Super Fast கடவுள் முருகனை பிடியுங்கள் அந்த குமரன் எதிலும் வேகம் நிறைந்தவன் உங்களின் குழந்தை ஆசையை தீர்த்து வைப்பான். இது என்னுடையஅனுபவத்தில் எல்லாருக்கும் நடந்து இருக்கிறது அதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். 

அடுத்தது குழந்தை உருவாகிவிட்டது என்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் தான் உங்களின் உழைப்பு இருக்கிறது நீங்கள் செய்யவேண்டியது கர்ப்ப காலத்தில் நல்ல மந்திரங்களை சொல்லி வாருங்கள் அது தினமும் சொல்ல வேண்டும். 

வீடு நல்ல சூழ்நிலையில் இருக்கு வேண்டும். சாந்தமான கோவிலுக்கு உங்கள் மனைவியை கூட்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு வாருங்கள். பஜனை செய்யும் இடங்களில் உங்கள் மனைவியை அமர சொல்லுங்கள். வீட்டில் உள்ள இசை கருவியில் நல்ல இசையை ஒடவிடுங்கள்.

சில தெய்வங்கள் பெண்கள் கர்ப்பத்தை கெடுக்கும் தன்மையில் இருக்கும் பேச்சியம்மன் போன்ற தெய்வங்கள் கர்ப்பகாலத்தில் கெடுதல் செய்யும் அதற்க்குகென்று தனி வழிபாடு சில குடும்பங்களில் செய்வார்கள்.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் செய்துவந்தால் உங்களின் குழந்தை நல்ல ஜாதக அமைப்புடன் பிறக்கும். நல்ல ஜாதக அமைப்புடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அது ஒன்றே போதும் அந்த குழந்தையை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் இந்த உலகத்தில் மின்னோளி போல் மின்னும். இது அனுபவ உண்மை.

குழந்தை பிறந்து நீங்கள் பல வருடம் அதற்க்காக கஷ்டபட்டு இருப்பதை விட பத்து மாதம் மட்டும் கஷ்டபட்டால் அந்த உழைப்பு நீங்கள் காலம் உள்ளவரை ஆனந்தத்தை அடையலாம்.

என்ன செய்வீர்களா?

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்.அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: