Followers

Tuesday, June 26, 2012

நான் பேச நினைப்பதெல்லாம்



வணக்கம் நண்பர்களே! நான் கடந்த நான்கு நாட்கள் சென்னையில் இல்லை திடீர் பயணமாக வெளியூர் சென்றுவிட்டேன். இன்று தான் சென்னை திரும்பி உள்ளேன். பல mail கள் வந்துள்ளன. அவற்றை எல்லாம் இன்று தான் பார்க்க முடிந்தது. உங்களுடைய பிரச்சினைகளை மற்றும் சந்தேகங்களை எல்லாம் இனிமேல் தீர்த்துவிடலாம்.

நான் உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். நான் சோதிட சம்பந்தமாக பதிவுகளை எழுதி கொண்டு வந்துள்ளேன் அதன் மூலம் நீங்கள் படித்து உங்கள் சோதிட அறிவை பெருக்கி கொள்கிறீர்கள். மற்ற பதிவர்கள் நடத்தும் பதிவுகளையும் நீங்கள் படித்து வருகிறீர்கள் நல்லது தான்.

இந்த சோதிட அறிவை மட்டும் நீங்கள் வைத்துக்கொண்டு நீங்கள் சோதிடம் பார்த்தால் உங்கள் பலன் மாறலாம். நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைபடும் விஷயம் என்ன என்றால் உங்கள் ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஜாதங்களை பார்த்துக்கொள்ளுங்கள் ஆனால் சோதிடத்தை அனைவருக்கும் பார்த்தால் அவர்களின் பாவ கணக்கில் இருந்து பத்து சதவீதமானாலும் நம்முடைய பாவகணக்கில் ஒட்டிக்கொள்கிறது. இதனை நான் அனுபவ ரீதியாகதான் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

நம்முடைய பாவகணக்கை நாம் போக்கி கொள்வதற்க்கே நாம் அவ்வளவு பாடு படவேண்டியதாகியிருக்கும் இதில் அடுத்தவர் பாவகணக்கு நமக்கு எதற்கு என்று சும்மாக இருப்பது நலம் பயக்கும்.

சோதிடத்தை பாடத்தில் கற்றதைக்கொண்டு பலன் சொல்லுகிறோம் ஆனால் அனுபவத்தில் சோதிட தொழில் செய்யும் போது பல சிக்கல்கள் உள்ளன. பல ஜாதகங்கள் மாந்தீரிகத்தால் தாக்கபட்டுள்ளன அதனை கண்டுபிடிப்பது ஏட்டு கல்வி உதவாது. அதனை பக்தியால் மட்டும் உணரமுடியும்.

 நாம் ஏட்டில் உள்ளதை படித்துவிட்டு பலன் சொல்லிக்கொண்டிருப்போம் ஆனால் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நல்ல பக்தி உள்ளவனால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். நான் கூட மாந்திரிகத்தை எல்லாம் ஆரம்பத்தில் நம்பவில்லை போக போக தான் இதனை அறிந்தேன். அதன் மூலம் தாக்கபட்ட ஜாதகத்தை நாம் பார்க்கும் போது நமக்கும் ஒரு பிரச்சினை உருவாகிறது இதனை நான் அனுபவத்தில் உணர்ந்ததால் தான் உங்களுக்கு இதனை சொல்லுகிறேன்.

நீங்கள் நினைக்கலாம் இவன் மட்டும் சம்பாதிக்க வேண்டும். அடுத்தவன் சம்பாதிக்ககூடாது என்று நினைக்கலாம். அது தவறு இல்லை தான் அதற்கு என்று ஒரு சில வழி முறைகள் உள்ளன அதனை கடைபிடித்து இந்த தொழிலை செய்யுங்கள்.

இங்கு படிப்பவர்களில் சோதிட தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் 100 ல் ஒருவர் தான் சோதிட தொழில் செய்வார்கள். அனைவரும் அவர்களுடைய ஜாதகங்களுக்கு பலனை மட்டும் பார்த்துக்கொள்வதற்க்காக தான் இப்பதிவுக்கே வருகிறார்கள். நீங்கள் சோதிடராக மாற வேண்டும அல்லது சோதிடதொழில் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது ?

அடுத்த பதிவில் அதனை பற்றி பார்க்கலாம்.

என்னடா ஆறாவது வீட்டு தசா பற்றி பதிவு வந்துகொண்டிருந்தது திடீர் என்று இந்த தலைப்பு வருகிறது என்று நினைக்கலாம் இடையில் உங்களிடம் கொஞ்சம் பேசலாம் என்று தான் இந்த தலைப்பை வைத்து பதிவை வெளியிட்டேன்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: