Followers

Tuesday, June 12, 2012

நோய்



வணக்கம் நண்பர்களே! நாம் 6 ஆம் வீட்டு அதிபதி தசா நடந்தால் என்ன செய்யும் என்று பார்த்தோம். அதில் முதலில் நோய் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ஆறாம் வீடு என்பது ஒரு ஆப்பு அடிக்கும் வீடு என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு அடிக்கும். அதில் முதலில் ஆப்பு அடிக்கும் விஷயம் நோய். 

ஒரு மனிதன் நோய் பற்றி பேசுவான் பேசும் போது பார்த்தீர்கள் என்றால் என்னடா இந்த வியாதிக்கு போய் கவலைபடுகிறாய் நான் எல்லாம் கையை வெட்டினாலும் கவலை பட மாட்டேன் என்று கூறுவான். அது அவன் அடுத்தவனுக்கு அவன் கூறும் விஷயமாக இருக்கும் இதுவே அவனுக்கு வந்தால் தெரியும் அவன் ஊரையே கூட்டி விடுவான் இது மனிதனுக்கு உள்ள பொதுவான பண்பு.

நோய் வந்தவுடன் தான் தெரியும் மனிதனுக்கு ஆரோகியம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும். என்னை கேட்டால் பணத்தை விட ஆரோகியம் முக்கியம் என்று கூறுவேன்.

ஒருவனுக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் அது அவனின் குடும்பத்தையே அழிக்க ஆரம்பித்துவிடும். சிறு வியாதியாக இருந்தால் பரவாயில்லை ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்சினை வந்துவிட்டால் அவ்வளவு தான் குடும்பம் கெட்டு நடு தெருவுக்கு வந்துவிடும்.

இன்றைக்கு மருத்துவதுறை நல்ல வளர்ச்சி கண்டு இருக்கிறது. நல்ல மருத்துவம் பார்ப்பது என்றால் கையில் பணம் நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சமாளிக்க முடியும்.

இப்பொழுது மருத்துவனை கட்டணத்தை பார்த்தால் மாதத்திற்கு லட்சம் சம்பாதிப்பவர்கள் மட்டும் தான் சமாளிக்க முடியும். என்ன தான் பணத்தை வைத்து வியாதியை குணப்படுத்தினாலும் நோய்க்கு முன்பு இருந்த ஆரோக்கியம். நோய்க்கு சிகிச்சை அளித்த பின்பு இருப்பதில்லை.

ஒருவருக்கு என்ன மாதிரி நோய்கள் வரும் என்று ஜாதகத்தை பார்த்தால் தெரியும். அந்த நோய் ஆறாம் வீட்டு தசாவில் ஆரம்பம் ஆகும். அந்த நோய்களை எப்படி நாம் அடையாம் காண்பது என்று தெரியும் அதை இப்பொழுது பார்க்கலாம்

6 ஆம் வீடு சரராசியாக இருந்து ஆறாம் வீட்டு தசா நடந்தால் தலைவலி, மூளைபாதிப்பு, வயிற்றுவலி, புற்றுநோய் தலையில் அடிப்பட்டு இரத்தபோக்கு நிற்காமல் வரும்.

6 ஆம் வீடு ஸ்திரராசியாக இருந்து ஆறாம் வீட்டு தசா நடந்தால் முதுகுத்தண்டில் வலி இருதயநோய், இரத்தகொதிப்பு, மூத்திரபாதையில் கல்அடைப்பு, கால்மூட்டில் வீக்கம், மறைவிடத்தில் வியாதி வரும்.

6 ஆம் வீடு உபயராசியாக இருந்து ஆறாம் வீட்டு தசா நடந்தால் இரத்தத்தில் கோளாறு, காசநோய், எலும்பு முறிவு, நுரையீரல் பாதிப்பு, இடுப்பு வலி ஏற்படும். 

இன்னும் ஏகபட்ட வியாதிகளின் தகவல்கள் உள்ளன. வரும் பதிவுகளில் அவை என்ன என்று பார்க்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: