Followers

Sunday, September 30, 2012

மோட்சம்



வணக்கம் நண்பர்களே நேற்றைய பதிவில் ஒரு கேள்வியை கேட்டுருந்தேன் யாரும் பதில் தரவில்லை. உங்களுக்கு இந்த சோதிட பதிவு மட்டும் பிடிக்கும் வேறு ஏதும் பிடிக்காது என்று தெரிந்துவிட்டது வழக்கம் போல் சோதிட பதிவுகளை தருகிறேன். 

கௌதம புத்தரிடம் ஒருவர் வந்து கேட்டார் சாமி நீங்கள் மோட்சம் அடைவதற்க்கு வழிகளை செல்லுகிறீர்கள் ஆனால் யாரும் வரவில்லையே என்று கேட்டார் அதற்கு கௌதம புத்தர் நீ காலையில் ஊருக்குள் சென்று அனைவரிடமும் உங்களுக்கு என்ன தேவை என்று எழுதி வாங்கிவா என்று சொல்லி அனுப்பினாராம் அதைப்போல் அவரும் அனைவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு மாலையில் புத்தரை சந்திக்க வந்தாராம்.

புத்தர் நீ எழுதி வாங்கிவந்ததை படி பார்க்கலாம் என்றாராம் அவரும் படித்தார் அந்த பேப்பரில் அனைவரும் அது வேண்டும் இது வேண்டும் என்று எழுதி இருந்தார்களே தவிர ஒருவரும் மோட்சம் அடையவேண்டும் என்று எழுதவில்லை. அப்பொழுது புத்தர் அவரை பார்த்து நான் அனைவரும் மோட்சம் அடையலாம் என்று சொல்லிருந்தேன் ஆனால் அவர்கள் அதனை அடையவிருப்படுகீறார்களா என்று சொல்லவில்லை. மனிதன் விருப்பட்டால் தான் அதை அடையமுடியும். 

இந்த நிகழ்வுபோல தான் அனைவருக்கும் நான் சொல்லுவது ஆன்மிக வாழ்வு அனுபவங்களை அனைவரும் பெறமுடியும் ஆனால் அதற்கு நீங்கள் விருப்பபட்டு செல்லவேண்டும் அப்பொழுது தான் அதனை பெறமுடியும். 

உங்கள் மனநிலையை மாற்றாதவரை கடவுள் ஆயிரம் முறை வந்து சொன்னாலும் உங்களால் ஆன்மிக வாழ்வில் முன்னேறமுடியாது. என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


1 comment:

Anonymous said...

sir please explain rebirth in jathagam