Followers

Tuesday, January 13, 2015

நீச சனி


வணக்கம் நண்பர்களே!
                      நம்மிடம் வரும் ஜாதகத்தை வைத்தே உங்களுக்கு பாடம் நடத்தமுடியும். நிறைய ஜாதகங்களை அனுபவ ரீதியாக உங்களுக்கு கொடுக்கமுடியும். அந்தளவுக்கு ஜாதகங்களை நான் நேரிடையாக அவர்களின் வாழ்க்கை பார்த்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஒரு சோதிடனாக வாழ்க்கையை தொடங்கியதால் அனுபவம் அதிகமாக எனக்கு இருக்கிறது. இதனை பெருமையாக உங்களுக்கு சொல்லவில்லை எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

சனிக்கு மேஷ ராசி நீச வீடு என்று சோதிடம் சொல்லுகிறது. நீச வீட்டில் ஒரு கிரகம் அமரும்பொழுது அதனால் பலனை அந்த ஜாதகருக்கு கொடுப்பதில்லை. ஒரு சில காலத்தில் அது எப்பொழுதாவது பலனை கொடுக்கிறது.

நீசவீட்டில் இருக்கும் கிரகம் எப்பொழுது பலனை கொடுக்கிறது என்பது எனக்கு தெரியாது ஆனால் எப்பொழுதாவது பலனை தருகிறது. சுத்தமாக கொடுக்கவில்லை என்று நாம் அதனை ஒதுக்கியும் தள்ளிவிடமுடியாது. நீசவீட்டில் இருக்கும் கிரகம் ஜாதகன் வேண்டுவதால் பலனை கொடுக்கிறதா என்று கூட தெரிவதில்லை.

மேஷத்தில் சனி இருந்து பிறந்த ஜாதகர்கள் ஒரு தொழிலை நிலையாக நடத்துவதில்லை. வேலை செய்யும் ஜாதகர்களாக இருந்தால் கூட அவர்கள் ஒரு வேலையை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருபவர்களாக இல்லை. ஒரு வருடம் அல்லது ஆறு மாதத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் ஆறு மாதம் வேலை செய்வது ஆறு மாதம் சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு இருப்பவர்களாக இருக்கின்றனர்.

ஒரு ஜாதகத்தில் சனிக்கிரகம் நீசமாவது ஒரு பெரிய தொல்லை என்று தான் சொல்லவேண்டும். வாழவும் விடாமல் சாகாவும் விடாமல் ஒரு மனிதனை போட்டு தொந்தரவு செய்தால் என்ன தான் அவன் செய்வான். அப்படிப்பட்ட ஒரு நிலையை நீச சனி கொடுக்கும்.

மேஷத்தில் சனி இருக்க பிறந்தவர்கள். குலதெய்வ வழிபாடு அல்லது கிராம தேவதை வழிப்பாட்டை மேற்க்கொண்டு வாருங்கள். ஒரு வேலை அல்லது ஒரு தொழில் உங்களுக்கு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: