Followers

Thursday, January 15, 2015

மாட்டுப்பொங்கல் படையல் வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                      நாளை மாட்டுப்பொங்கல். மாட்டுப்பொங்கலை கிராமத்தில் அதிவிமர்சியாக கொண்டாடுவார்கள். மாட்டுப்பொங்கலை நகரத்தில் இருப்பவர்கள் கொண்டாடுவதில்லை. பெரும்பாலும் கொண்டாடுவதில்லை என்று நினைக்கிறேன்.

மாட்டுப்பொங்கல் விழா மாடுகளுக்கு மட்டும் நாம் கொண்டாடுவதில்லை. நமது முன்னோர்களுக்கு படையல் போட்டு கிராமங்களில் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு பிடித்தமான உணவு மற்றும் துணிமணிகளை வைத்து படையல் போடுவார்கள்.

அமாவாசை விரதத்தை விட இந்த படையல் மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று நமக்கு ஏற்படும் அத்தனை பித்ரு தோஷத்தை எல்லாம் போக்கும் இந்த படையல் வழிப்பாட்டை செய்தால் நல்ல வாழ்க்கை வாழலாம்.

நீங்கள் இதுவரை இந்த வழிபாடு செய்யவில்லை என்றாலும் இனிமேலாவது இந்த வழிபாட்டை செய்து நல்ல வாழ்க்கையை வாழுங்கள். உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு ஆசி வழங்குவார்கள். அந்த ஆசி இருந்தால் போதும் எப்படிப்பட்ட கிரகத்தின் தாக்குதலில் இருந்தும் தப்பிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: