வணக்கம்
நான் பல பேர்களை சந்திக்கும்பொழுது அதுவும் பிரச்சினையில் சிக்கி இருப்பவர்களை சந்திக்கும்பொழுது அவர்களின் பீடை என்னை வந்து தாக்குவதை நான் உணர்ந்து இருக்கிறேன். எத்தனையோ வழிகளை சொல்லி அதனை பின்பற்றாமல் பீடையோடு இருக்கும் நண்பர்களை பார்த்து நான் பரிதாபப்படமட்டும் தான் முடியும் தவிர வேறு ஒன்றும் என்னால் செய்யமுடியாது என்று நினைப்பது உண்டு.
சனி கெட்டு ஒருவருக்கு தசா நடந்தால் அவருக்கு இப்படிப்பட்ட பீடைகள் இருக்கும் என்பதை பல பேர்களிடம் நான் பார்த்தது உண்டு. ஒரு சிலருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டசனி காலத்தில் கூட இப்படி நடப்பது உண்டு.
சனித்தசாவுக்கு ஒரு நல்ல பரிகாரம் என்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது. சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வாருங்கள் என்று நான் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு சனி தசா நடந்தால் கண்டிப்பாக இதனை பின்பற்றி வாருங்கள்.
சனித்தசா ஒரு சிலருக்கு நல்லது செய்யும். சனிக்கிரகம் நல்ல நிலைமையில் இருந்து தசாவை நடத்தும்பொழுது அவர்களும் இந்த குளியலை பின்பற்றி வந்தால் பல நல்ல பலன்களை அடையமுடியும்.
சனி தசாவைப்பற்றி எழுதும்பொழுது ஒரு நண்பர் என்னிடம் எல்லாேரும் சொல்லும் பொதுப்பலன்களை மட்டும் எழுதுகிறீர்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் என்று கேட்டார். நான் சனித்தசா ஆரம்பிக்கும்பொழுதே இதனை சொல்லிவிட்டேன். எல்லாம் பொதுப்பலன்களாக தான் எழுதபோகிறேன் என்று சொல்லிவிட்டேன். என்னை சந்திக்கும்பொழுது சனித்தசாவைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment