வணக்கம் !
சனிதசாவைப்பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. சனிதசாவைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு மேஷத்தில் இருந்து சனி தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷத்தில் சனி நீசம் என்பதால் நல்ல பலனை நாம் எதிர்பார்க்கமுடியாது. நீசசனியை சுபகிரகங்கள் உங்களின் ஜாதகத்தில் பார்த்து சனிதசாயை நடத்தினால் அதிக பாதிப்பை தராது. சுபகிரகங்கள் பார்வை இல்லை என்றால் பிரச்சினை சற்று அதிகமாக இருக்கும்.
மேஷத்தில் சனி இருப்பதால் அதிகமாக சனியின் தசாவில் விபத்துக்களை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல வைக்கும்.உடலில் தீக்காயங்கள் கூட ஏற்படும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு தோல் பிரச்சினை ஏற்படும்.
விவசாய நண்பர்களாக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. விவசாயத்தில் நீங்கள் வருமானத்தை பார்க்கவே முடியாதபடி செய்துவிடும்.
தசா பாதி காலம் பிரச்சினை தந்து பிறகு இருக்கும் பாதி காலம் நல்ல பலனை தரும். கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களை வைத்து நீங்கள் வியாபாரம் அல்லது விவசாயம் செய்து நல்ல பலனை பெறமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment