Followers

Wednesday, November 18, 2015

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          ஒரு ஜாதகம் உங்களிடம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாதகத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள் ஒன்பதாவது வீட்டு அதிபதி நன்றாக இருக்கின்றது. பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது அதனால் இவர் இளம் வயதில் இருந்து நன்றாக வாழ்வார் என்று உடனே சொல்லிவிடகூடாது.

பாக்கியஸ்தானம் நன்றாக இருந்த முக்கால்வாசி ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். இளம்வயதில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்திருக்கின்றனர். நடுவயதிற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதோடு அவர்களின் வாரிசுகளும் அவர்களும் நன்றாக வாழ்கின்றார்கள்.

ஒரு முறை ஒருவரின் ஜாதகத்தை நான் வாங்கி பார்த்தேன். அதில் ஒன்பதாவது வீட்டு அதிபர் நன்றாக இருந்தது. என்னிடம் இருந்த படித்த புத்தகத்தில் பாக்கியஸ்தான அதிபதி நன்றாக இருக்கின்றது அதனால் நல்ல பாக்கியமுடியவன் நன்றாக வாழ்வான் என்று சொல்லிவிட்டேன். அவருக்கு இருபத்திதைந்து வயது இருக்கும். உண்மையில் அவர் நன்றாக வாழவில்லை. 

அப்பனின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும்பொழுது தான் பையன் இளம்வயதில் நன்றாக வாழ்வான். அவர் அவர்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தாலும் முப்பது வயதிற்க்கு மேல் நன்றாக வாழ்வார்கள் என்று சொல்லலாம்.

பாக்கியஸ்தானம் நன்றாக இருந்து ஒருத்தர் சம்பாதித்தால் போதும் ஒரு நான்கு அல்லது ஐந்து தலைமுறை நன்றாக உட்கார்ந்துக்கொண்டு வாழலாம். பல இடங்களில் இப்படி தான் நடக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: