Followers

Friday, December 25, 2015

பணம்


ணக்கம்!
          ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை யாராவது ஒருவர் செலவு செய்ய பிறப்பார்கள். அதே குடும்பத்தில் உள்ள நபர்களாக கூட இருக்கும்.

ஒரு வழியில் பணம் வந்தால் மறுவழியில் சென்றுவிடும். ஒரு சிலருக்கு கொஞ்ச காலம் சென்று செல்லும் ஒரு சிலருக்கு அவரின் காலத்திலேயே சென்றுவிடும்.

ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் என்றால் தான் கஷ்டப்பட்டதோடு இருக்கவேண்டும் தன் வாரிசு ஒரு நாளும் கஷ்டப்படகூடாது என்று நினைக்கிறார்கள். இது ஒரு நியாயமான ஒரு கொள்கை தான் அதே நேரத்தில் கஷ்டப்பட்ட பணத்தை எப்படி காப்பாற்றவேண்டும் என்பதை தன் வாரிசுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை.

பல குடும்பங்களை நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் அதிலும் நல்ல பணக்கார குடும்பத்தில் உள்ள நபர்களை பார்க்கும்பொழுது அவர்களின் வாரிசுகள் எந்த விதத்திலும் ஒரு நல்லநிலையில் இல்லை. நல்ல நிலை என்றால் தன்னுடைய சொத்தை காப்பாற்ற கூட தெரியாமல் ஊதாரியாக செலவு செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

என் அனுபவத்தில் பார்த்துவிட்டு தான் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன். சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதனை கடைசிவரை எப்படி காப்பாற்றுவது என்பதை உங்களின் வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுத்துவிடுங்கள். செல்லமாக வளர்க்கிறேன் என்று ஊதாரிதனமாக வளர்த்துவிடாதீர்கள். 

பணம் என்பது குடும்பத்தில் யாராவது ஒருத்தர் நல்ல சம்பாதிப்பார். அப்படி சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தில் உள்ள நபர்கள் உட்கார்ந்து செலவு செய்துக்கொண்டு இருப்பார்கள். பணம் எப்படி வரும் என்றால் ஜாதகத்தில் நல்ல அமைப்பு ஒருவருக்கு இருந்து அது வரும் அப்படி வரும் பணத்தை நீண்ட காலத்திற்க்கு சேமிக்கவேண்டும்.

எல்லா குடும்பமும் பல தலைமுறை நன்றாக வாழவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். பணம் சம்பாதிப்பதோடு இருந்துவிடாதீர்கள். சம்பாதித்த பணத்தை எப்படி செய்தால் நீண்ட காலத்திற்க்கு இருக்கும் என்பதையும் சொல்லிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: