Followers

Saturday, December 30, 2017

சுக்கிரன்+செவ்வாய்


வணக்கம்!
          சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களின் திருமணம் நடக்கும்பொழுது சண்டை சச்சரவில் தான் ஆரம்பிக்கும். சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களின் திருமண வாழ்வும் சண்டை சச்சரவோடு தான் இருக்கும்.

ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர் மகளிர் காவல் நிலையத்திற்க்கு சென்று வரவேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாகிவிடும். கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக்கொண்டு மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவார்.

சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களின் அண்ணன் அல்லது தம்பி வழியில் உள்ள மனைவி உறவு அந்தளவுக்கு நன்றாக இருக்காது. அவர்கள் உங்களை வாழவிடாமல் செய்வதற்க்கு வழி செய்வார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருக்கும் நபர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும். காம எண்ணத்தில் கூட வலுகட்டாயமாக உறவுக்கொள்ள மனது நினைக்கும் அது போல செயல்படுவார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருக்கும் நபர்கள் செயல்பாட்டில் துணிவு அதிகமாக இருக்கும். எதற்க்கும் கவலைப்படமாட்டார்கள். வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லுவார்கள். சுக்கிரன் செவ்வாய் ஒரு சிலருக்கு பெண்களின் வழியில் நிலபுலன்கள் கிடைப்பது போல செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: