Followers

Saturday, July 5, 2014

விரைய தசா பகுதி 30


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு லக்கினாதிபதி விரைய வீட்டில் இருந்தால் அவர்களை அனைத்து விசயத்திலும் பிறர் சொல்லி சொல்லி தான் அவர்களை முன்னேற்றம் காண வைக்கமுடியும்.

லக்கினாதிபதி விரையம் என்பதால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டும். நிறைய பேருக்கு திருமணம் கூட தோல்வியை தந்திருக்கிறது.இவர்கள் முடிவுகள் எடுப்பதில் அதிகமாக திண்டாடுவார்கள். எது சரியான முடிவு என்று கூட தெரியாது. இவர்கள் எடுக்கும் முடிவு அதிகமாக தோல்வியை கொடுத்துவிடும்.

ஒரு முடிவை எடுத்துவிட்டு அதனையே பிடித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த முடிவு சரியான வழியாக இருக்காது ஆனால் அதனை பிடித்துக்கொண்டு இருப்பதால் பிரச்சினையை அதிகமாக சந்திப்பார்கள்.

எனக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் காதலில் விழுந்துவிட்டு அந்த காதலை அப்படியே பிடித்துக்கொண்டு இருப்பார்கள். இவர் காதலித்த நபர் திருமணம் செய்துக்கொண்டு போய்விடுவார்கள் ஆனால் இவர்கள் காதல் தோல்வி என்று பிறரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உங்களுக்கு லக்கினாதிபதி விரையத்தில் இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து அனைத்து முடிவுகளையும் சரியாக எடுங்கள். ஒன்று சரியில்லை என்றால் அடுத்ததை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள். லக்கினாதிபதிக்கு சரியான பரிகாரத்தை செய்துக்கொண்டு வாழ்க்கையை எதிர்க்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் 12ல விரையம். புதனுக்குப் பரிகாரங்கள் சொல்ல முடியுமா? ப்ளீஸ்