Followers

Wednesday, July 23, 2014

குலதெய்வம் ஒரு சில விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதில் ஒரு விசயத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

நீங்கள் குலதெய்வ வழிப்பாட்டை செய்து வந்தால் உங்களின் வாசல் படியில் கயிறு மற்றும் படிக்கார கல்லை கட்டி வைக்காதீர்கள். அப்படி கட்டி வைத்தால் உங்களின் குலதெய்வம் உங்களின் வீட்டிற்க்கு வராது. 

நீங்கள் செல்லும் ஒவ்வொரு கோவிலும் கயிறு மற்றும் எலுமிச்சைபழத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கி வந்து உங்களின் வீட்டில் வாயிற்படியில் கட்டி தொங்கவிடகூடாது.  குலதெய்வத்திற்க்கு இது பிடிக்காத ஒன்று. இதுவரை வாங்கி வந்து கட்டியிருந்தால் அதனை கழட்டிவிடுங்கள். 

உங்களின் குலதெய்வத்தை விட்டு நீங்கள் பிற தெய்வங்களை நாடி சென்றததால் உங்களுக்கு கிரங்களின் தாக்குதல் ஏற்பட்டு பிரச்சினை வருகிறது. உங்களின் குலதெய்வத்தை மட்டும வணங்கினாலே உங்களின் பிரச்சினை அனைத்தும் தீரும்.

என்னிடம் வரும் நண்பர்களுக்கு எல்லாம் நமது அம்மனை வைத்து உங்களின் குலதெய்வ ஆற்றலை எடுக்க வேண்டியுள்ளது. நமது அம்மன் உங்களின் குலதெய்வத்திற்க்கு உதவி வருகிறது. நீங்கள் செய்த தவறுக்கு நான் பொறுப்பு ஏற்று நடத்திக்கொடுக்க வேண்டியுள்ளது. அனைவரும் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய தொடங்குங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: